பொங்கல் விழாவில் சிலம்பம் சுற்றி அசத்திய CM ஸ்டாலின்.. கைதட்டி ரசித்த மக்கள்..! கவனம் ஈர்க்கும் வீடியோ..!

stalin silambam

தமிழர் திருநாளான பொங்கல் விழா வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ‘ திராவிட பொங்கல் விழா’ கொண்டாட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.. அதன்படி திமுக சார்பில் மாவட்டம் தோறும் மாவட்டம் தோறும் திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது..


இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று காலை திராவிட பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது..

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.. விழாவில் கலந்து கொண்ட பெண்கள், நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்.. மேலும் அங்கு மிகப்பெரிய பொங்கல் பானை அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.. அங்கு பசு மற்றும் கன்று ஆகியவை நின்று கொண்டிருந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள்.. பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.. முதல்வர் மு.க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் பொங்கல் வைத்தனர்.

முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் சிலம்பம் சுற்றி அசத்தினார்.. அங்கிருந்த சிறுவனிடம் இருந்து சிலம்பத்தை வாங்கிய முதல்வர் அதனை சுற்றிய போது அருகில் இருந்த மக்கள் கைக்கட்டி ரசித்து பார்த்தனர்.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது..

Read More : Flash : இனி மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்..! சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

RUPA

Next Post

இது வரம்பற்ற செயல்.. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது; காங். நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!

Sat Jan 10 , 2026
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி […]
Selvaperunthagai

You May Like