நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8 ஆம் தேதி Gen Z தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர்.
போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. பல அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டில் ஆட்சி கவிழ்ந்தது.. இதையடுத்து தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் உள்ளது.. மேலும் அங்கு இடைக்கால அரசை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன..
இந்த நிலையில், நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பதற்றமான சூழல் நிலவும் நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் தங்கள் விவரங்களை 011 2419330, 9289 5167 12 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது..