பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தனுஸ்ரீ தத்தா.. இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.. இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் #MeToo இயக்கத்தை தொடங்கி உள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். ஹார்ன் ஓகே ப்ளீஸ் படப்பிடிப்பில் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்ததாக அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் வீடியோவில், கண்ணீர் விட்டு அழுத நடிகை தனது சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பதிவில் “இந்த துன்புறுத்தலால் நான் சோர்வாகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன்!! இது 2018 முதல் நடந்து வருகிறது #metoo தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் இப்போதுதான் போலீசாருக்கு போன் செய்தேன். அவர்கள் முறையான புகாரை அளிக்க காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள். நான் நாளை அல்லது மறுநாள் செல்வேன். எனக்கு உடல்நிலை சரியில்லை. கடந்த 4-5 வருடங்களாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு மூத்த நடிகர் நானா படேகர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த பல ஆண்டுகளாக மன ரீதியாக பாதிக்கப்பட்டதால் தனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
.“ என் வீட்டில் வேலைக்காரிகளை கூட வேலைக்கு அமர்த்த முடியவில்லை. வேலைக்காரிகளுடன் எனக்கு மோசமான அனுபவம் இருந்தது. அவர்கள் வந்து என் வீட்டில் இருந்து பொருட்களை திருடுகிறார்கள். நான் என் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். என் சொந்த வீட்டில் நான் சிரமப்படுகிறேன். தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்.”
பின்னணியில் சுற்றுப்புற சத்தத்துடன் மற்றொரு வீடியோவையும் நடிகை தனுஸ்ரீ தத்தா பகிர்ந்து கொண்டார். அதில் “2020 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவ்வப்போது இதுபோன்ற சத்தங்களையும், என் வீட்டிற்கு மேலேயும், கதவுக்கு வெளியேயும் மிக அதிக சத்தமாக இடி சத்தங்களையும் நான் எதிர்கொண்டிருக்கிறேன்! கட்டிட நிர்வாகத்திடம் புகார் செய்வதில் நான் சோர்வடைந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு அதை கைவிட்டேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஹெட்ஃபோன்களுடன் இந்து மந்திரங்களைக் கேட்பதன் மூலம் தான் சமாளிக்கிறேன் என்றும், நீண்டகால மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக தனக்கு நாள்பட்ட சோர்வு நோய் இருப்பதாகவும் தனுஸ்ரீ மேலும் கூறினார். “இன்று நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்… நேற்று நான் இதை பதிவு செய்தேன்.., இன்று இதையும் பதிவிட்டேன்! நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை, விரைவில் FIR பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் விவரங்களை வெளியிடுவேன் என்றும் கூறினார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்..