சென்னையில் நாளை (செப்.1) முதல் டீ, காபி உள்ளிட்ட பானங்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் டீக்கடைகளில் அடிக்கடி செல்லும் மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு, பெட்ரோல் விலை உயர்ந்து மக்கள் ஏற்கனவே சிரமத்தில் தவிக்கின்றனர். அதற்கு மேலாக, மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத டீ, காபி விலை கூட உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விலைப்பட்டியல்
- டீ – ரூ.15
- காபி – ரூ.20
- லெமன் டீ – ரூ.15
- பால் – ரூ.15
- ஸ்பெஷல் டீ – ரூ.20
- ராகிமால்ட், சுக்கு காப்பி – ரூ.20
- ஹார்லிக்ஸ், பூஸ்ட் – ரூ.25
பார்சல் விலை
- டீ / பால் – ரூ.45
- காபி – ரூ.60
- ஸ்பெஷல் டீ – ரூ.60
டீத்தூள், பால் மற்றும் பிற உபகரணங்களின் விலை அதிகரித்ததனால் கட்டாயமாக இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது என டீக்கடை உரிமையாளர் சங்கம் விளக்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே சமூக வலைத்தளங்களில் டீ, காபி விலை உயர்வை குறித்து மீம்ஸ்கள் மழைபோல் பகிரப்பட்டு வருகின்றன.
3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.