ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்கள்..!! உச்ச வயது வரம்பு உயர்வு..!! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்திதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2021 செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் 13இல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு, அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள 30 ஆண்டுகளில் இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும், அதிகபட்ச வயது உச்ச வரம்பினை கொண்டுள்ள பதவிகளை பொறுத்தவரையில், தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்கள்..!! உச்ச வயது வரம்பு உயர்வு..!! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

அதன் அடிப்படையில், தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய வயது வரம்பு தளர்வு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே சிறப்பு நிகழ்வாக ஒரு முறை நிர்ணயித்து ஆணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர் தகுதிதேர்விற்கு தயாராகி வருவோர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

CHELLA

Next Post

அதிர்ச்சி..!!! மகளின் சாவுக்கு காரணமான காதலனை கொன்று மகள் சமாதி அருகே புதைத்த தந்தை..!!

Fri Oct 21 , 2022
மகளின் தற்கொலைக்கு காரணமான காதலனை கொலை செய்து சமாதி அருகே தந்தை புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் துவாரகா திருமலை மண்டலம், ஐ.எஸ்.ராகவபுரம் ஊராட்சி துர்ல லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தனிகடப்பா பவன் கல்யாண் (24). இவரும் ராமசிங்கவரம் ஊராட்சி கொடுகுப்பேட்டையை சேர்ந்த மரிது ஷியாமளா (18) என்பவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். தங்களின் காதலை சில மாதங்களுக்கு முன், வீட்டில் இருவரும் கூறினர். ஆனால், இருவரும் […]
அதிர்ச்சி..!!! மகளின் சாவுக்கு காரணமான காதலனை கொன்று மகள் சமாதி அருகே புதைத்த தந்தை..!!

You May Like