அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த 30 வயதுப் பெண், மைனர் மாணவர் ஒருவருடன் ‘ஸ்நாப்சாட்’ செயலி மூலம் நண்பராகி, பின்னர் நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கேவ் சிட்டியைச் சேர்ந்த கிரிஸ்டால் சிம்ஸ் (வயது 30) என்ற இந்தப் பெண், விடுப்பில் சென்ற ஆசிரியர் ஒருவருக்குப் பதிலாக தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தவர். இவருக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் பணிக்கு வந்த பிறகு, பல மாணவர்கள் இவருக்குச் சமூக வலைதளங்களில் ‘ஃபிரண்ட் ரெக்வெஸ்ட்’ அனுப்பியுள்ளனர்.
இந்தச் சூழலில், ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸ், 18 வயதே ஆகாத மாணவனுக்கு தானே முன்வந்து ‘ஸ்நாப்சாட்’ மூலமாக ‘ஃபிரண்ட் ரெக்வெஸ்ட்’ கொடுத்துள்ளார். ஆசிரியை என்பதால் அந்த மாணவரும் அதனை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, இருவரும் தொலைபேசி மற்றும் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு அவ்வப்போது பேசி வந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, இருவரும் செல்போனில் பேசியபோது கேவ் சிட்டியில் சந்திப்பது குறித்து பேசியுள்ளனர். பின்னர், ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸ், அந்த மாணவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அவர் உடலில் ஆடையின்றி, குளித்தபடி மாணவரிடம் பேசியுள்ளார். இந்தச் செயலைப் பார்த்து மாணவர் அதிர்ச்சியடைந்தபோதும், ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸ் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் நிர்வாணமாகப் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், உல்லாசம் அனுபவிக்கும் நோக்குடன் தனிமையில் சந்திப்பதற்கான அழைப்பையும் அவர் விடுத்ததாக தெரிகிறது.
ஆசிரியையின் இந்தச் செயல் குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவர், ஆசிரியை இருவரும் செல்போனில் பேசியதை பதிவு செய்திருந்தார். அந்த குரல் பதிவுகளின் அடிப்படையில், போலீசார் ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், மாணவருடன் செல்போனில் பேசியதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இருவரும் பள்ளியைத் தவிர வேறு எந்த இடத்திலும் சந்தித்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பின்னர், ஆசிரியை கிரிஸ்டால் சிம்ஸ் பரேன் கவுன்டி தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, 25,000 அமெரிக்க டாலரைப் பிணைத் தொகையாகச் செலுத்திய பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது கிரிஸ்டால் சிம்ஸ் மீதான இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் கடும் சட்டச் சிக்கல்களைச் சந்தித்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



