மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்; அடித்து செருப்பு மாலை அணிவித்த பெற்றோர்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் வேலை செய்து வருகிறார் துகாராம். இவர் பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து பாலியல் ரீதியாக அவர்களிடம் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.


இது குறித்து ஆறு மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அவர்களது பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் அந்த ஆசிரியரின் முகத்தில் மை தெளித்து செருப்பு மாலை போட்டு தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து அந்த ஆசிரியரை மீட்டனர். அந்த ஆசிரியரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பவேண்டும் என்று கோரி கிராம மக்கள் காவல் நிலையம் முன் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறையினர் அதிகாரி பாசுதேவ் தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்; போலீசார் விசாரணை..!

Fri Sep 30 , 2022
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர், போன் செய்து பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்தார். அந்த மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து, காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் அருகே மிரட்டல் விடுத்தவரின் செல்போன் சிக்னல் காட்டியது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், ரயில் நிலையத்தில் இருந்த மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். இதுகுறித்து அந்த […]
Untitled 201

You May Like