fbpx

இந்திய சந்தையில் படு அடி வாங்கி உற்பத்தியை நிறுத்திய 7 பைக் நிறுவனங்கள்..!! என்னென்ன தெரியுமா..?

ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய பைக்குகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அதில், சில பைக்குகள் விற்பனையில் பெரும் வெற்றியை பெறுகிறது. மற்றவை கொஞ்சம் சந்தையை தாக்குப்பிடித்து நிற்கிறது. ஒரு சிலதோ இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறது.

அப்படிப்பட்ட 7 பைக்குகள் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த பைக்குகள் வித்தியாசமான விளம்பர யுக்தியைக் கொண்டு களமிறக்கப்பட்டாலும், சில நாட்களிலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அந்த பைக்குகள் எவை என்று பார்க்கலாம்.

1. சுஸூகி இண்ட்ரூடர் 150

உலகளவில் பிரபலமான இண்ட்ரூடர் 1800 பைக்கை இந்தியாவில் 150cc திறனில் சுஸூகி நிறுவனம் கொண்டுவந்தது. 5 ஆண்டுகள் தாக்குப்பிடித்ததைத் தொடர்ந்து, விற்பனையில் தொய்வு ஏற்பட்டதால், 2017ஆம் ஆண்டு அதன் தயாரிப்பை நிறுவனம் நிறுத்தியது.

2. மஹிந்திரா மோஜோ

அதிக திறன் கொண்டு வெளியிடப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் லுக் பைக் இதுவாகும். 295சிசி எஞ்சின், 26.8எச்பி பவர், 30 என்எம் டார்க் போன்ற பல திறன்வாய்ந்த அம்சங்கள் இருந்தும் சந்தையில் நல்ல இடத்தைப் பிடிக்க முடியவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு நிறுவனம் இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் வெளியிட்டது. அதுவும் எந்த முன்னேற்றத்தையும் விற்பனையில் ஏற்படுத்தவில்லை.

3. ஹீரோ இம்பல்ஸ்

2008ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆஃப் ரோடு ஸ்போட்ஸ் பைக் இந்தியர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. இதை 2016ஆம் ஆண்டில் நிறுத்திய நிறுவனம், Xpulse எனும் புதிய மாடலை அறிமுகம் செய்து தற்போது சந்தையில் போட்டியை சமாளித்து வருகிறது.

4. ஹோண்டா நேவி

உலக சந்தையில் வெற்றிக்கண்ட இந்த குட்டி பைக் இந்திய மக்களை கவரும் என ஹோண்டா நிறுவனம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், குறைந்த அளவே விற்பனை ஆகி இருந்ததால், 2020ஆம் ஆண்டில் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

5. ஹோண்டா கிளிக்

இந்தியாவில் ஹிட்டடிக்கும் என நினைத்து வெளியிடப்பட்ட இந்த பைக் பெரிதாக ஒன்றும் சந்தையை, பைக் பிரியர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. 2020-21 காலத்தில், 7 மாதங்களில் வெறும் ஒரு வாகனம் மட்டுமே விற்பனையாகி உள்ளது. 2020-இல் இந்த வாகனத்தின் தயாரிப்பை ஹோண்டா நிறுத்தியது.

6. எல்.எம்.எல். ஃப்ரீடம்

கடந்த 2002ஆம் ஆண்டு 110 சிசி திறன்கொண்ட எல் எம் எல் ஃபிரீடம் பைக் அறிமுகமானது. ஆனால், குறைந்த திறன், விற்பனையில் மந்தம் ஆகிய காரணங்களுக்காக 2018ஆம் ஆண்டு நிறுவனமே திவாலானது.

7. சுஸூகி இனாசுமா 250

பெரிய எதிர்பார்ப்புடன் அதிக வசதிகளைக் கொண்டு களமிறங்கிய இந்த வாகனமும் சந்தையில் விற்பனையாகவில்லை. 248 சிசி டிவின் சிலிண்டர் எஞ்சின், 6 கியர்பாக்ஸ் போன்ற அம்சங்கள் இதில் அடங்கும். ஆனால், சில காரணங்களுக்காக இந்த பைக்கை மக்கள் விரும்பவில்லை.

Chella

Next Post

”அனைத்துப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும்”..!! பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பயணித்த கனிமொழி எம்பி..!!

Fri Jun 23 , 2023
டாக்டர், என்ஜினியர்கள் மட்டுமல்ல அனைத்துப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டிப் பேசியுள்ளார் திமுக எம்பி கனிமொழி. கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா, பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரை பற்றியச் செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் […]

You May Like