இந்தியாவில் 5ஜி சேவையானது கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 1ஆம் தேதி சோதனை ஓட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட 5ஜி சேவை, பின்னர் படிப்படியாக முன்னணி நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் வழங்கி வருகின்றன. எனவே, முன்னணி நகரங்களில் வசிக்கும் மக்கள் 5ஜி சேவையை தற்போதே பெறலாம். புதிய ரக ஆப்பிள் ஐ ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு இப்போது அவர்கள் போனில் 5ஜி சேவைக்கான வசதி கிடைத்திருக்கும். அப்படி இருக்க இந்த பயனாளர்கள் 5ஜி சேவை நடைமுறையில் இருக்கும் முன்னணி நகரங்களில் வசித்தால், தற்போதே தங்கள் போனில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.

ஐ ஃபோனில் ஏர்டெல் 5ஜி சேவை..!
- உங்கள் ஐபோனில் 5ஜி வசதியும், உங்கள் பகுதியில் ஏர்டெல் 5ஜி சேவையும் கிடைத்தால் எளிதில் இதை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இதற்காக ஏர்டெல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து 5ஜி சேவை உங்கள் போனில் சப்போர்ட் செய்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும்.
- சில வேளை, ஏர்டெல் ஆப்ளிகேஷனில் இது அப்டேட் ஆகியிருக்காது. எனவே, நீங்கள் நேரடியாக உங்கள் போனில் Settings> Mobile Data> Mobile Data Options> Voice & Data என இதற்குள் நுழைந்து அதில் 5ஜி சேவையை செலக்ட் செய்ய வேண்டும். இதன் மூலம் போனில் 5ஜி சேவை ஆக்டிவேட் ஆகி ஸ்டேடஸ் பாரில் 5ஜி என தென்பட ஆரம்பிக்கும்.