ஆப்பிள் நிறுவனத்திற்கு சார்ஜர் இல்லாமல் செல்போன்கள் விநியோகித்ததற்காக 20 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனங்கள் அளிக்கும் செல்போன்களுக்கு மின்னேற்றிகளை கொடுப்பதில்லை. இதனால் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து செல்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வகையான வருத்தம்தான்.
ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தனித்துவ வசதிகளைக் கொண்டுள்ளது அதிகமான விலைக்கு விற்கப்படுவதால் பணக்காரர்கள் அல்லது அந்த அளவுக்கு பண வசதிகள் கொண்டவர்கள் மட்டுமே இதை வாங்க முடிகின்றது. என்னதான் அவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கினாலும் சார்ஜர் இல்லையே!!
விலை அதிகமாக இருந்தால் வசதிகளும் அம்சங்களும் அதில் இருக்க வேண்டும். ஒரு செல்போனுக்கு முக்கியமான விஷயம் என்பது சார்ஜர்தான். முன்னதாக பிற செல்போன்களுக்கு ஹெட்செட் கூட வரும் தற்போது வரும் போன்களில் அந்த ஹெட்செட் கிடைப்பதில்லை. ஆப்பிள் போன்களில் சார்ஜர் தருவதில்லை. வெறும் வயரை மட்டும் வழங்கும் நிலையில் அதற்கான அடாப்டர்களை நாம் வெளியில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும். அல்லது தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும். பிற நிறுவனங்கள் அடாப்டர், சார்ஜர் என வழங்கும் நிலையில் இவ்வளவு விலை கொடுத்த பின்னரும் அது கிடைப்பதில்லை.
இந்த நிறுவனம் மட்டும்தான் இந்த முறை பின்பற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரேசில் நாட்டில் சார்ஜர் இன்றி செல்போன் விற்பனை செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்கழிவுகளை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதாக ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் சார்ஜர் இல்லாமல் புதிய செல்போன் வகை ஐபோன் 12 மாடல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சுமார் 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது பிரேசில் நீதிமன்றம். எனவே புதிய மாடல்களுக்கு அடாப்டர்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக ஐபோன் எஸ்.இ.4 என்ற மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளேவுடன் வருகின்றது. இதன் விலை ரூ.33,674 என குறிப்பிடப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை இது உறுதித்தன்மை இல்லாதது. விரைவில் இதன் முழு விவரம் வெளியாகும்.