fbpx

புதிதாக கார் வாங்கப்போறீங்களா..? ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் இவ்வளவு சிறந்த கார்களா..? லிஸ்ட் இதோ..!!

தற்போது விற்பனைக்கு வரும் காரில் பல மேம்பட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (Automatic Climate Control). காரில் கொடுக்கப்படும் இந்த தொழில்நுட்பம் காருக்குள் இருக்கும் ஏசி வெப்பநிலையை மேனுவலாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இந்த டெக்னலாஜி கார் கேபினின் ஈரப்பதம், காரின் வெப்பநிலை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், யூஸர்கள் தங்களுக்கான தனிப்பட்ட டெம்ப்ரேச்சரை அமைக்க அனுமதிக்கிறது. மேலும், இது காருக்குள் இருக்க வேண்டிய காற்று விநியோகம், காற்று ஓட்டம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை ஆடோமேட்டிக்காக கட்டுப்படுத்துகிறது. இந்த அம்சத்தின் பல நன்மைகளை கருத்தில் கொண்டு நீங்கள் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கொண்ட புதிய காரை ரூ.10 லட்சத்திற்குள் வாங்க விரும்புகிறீர்களா? இதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி இக்னிஸ் :

ரூ.5,84,000 (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையுடன் வரும் மாருதி சுசுகியின் Ignis, கேபினுக்குள் தேவையான வெப்பநிலையை ஆட்டோமேட்டிக்காக பராமரிக்க கூடிய Automatic Climate Control அம்சத்துடன் வருகிறது. இந்த ஹேட்ச்பேக் வாகனத்தில் உள்ள பிற அம்சங்களில் ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ, ஸ்டீயரிங் மவுன்ட்டட் கன்ட்ரோல்ஸ், வாய்ஸ் கமெண்ட் சிஸ்டம் மற்றும் கியர் ஷிப்ட் இண்டிகேட்டர் உள்ளிட்டவை அடக்கம்.

டாடா டியாகோ :

Tata-வின் Tiago பாதுகாப்பு காரணங்களுக்காக டூயல் ஏர்பேக்ஸ், டைனமிக் கைட்லைனஸுடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, கார்னர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களுடன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த ஹேட்ச்பேக்கின் விலை ரூ.5,60,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

ரெனால்ட் க்விட் :

இந்த கார் ரூ.4,69,500 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. KWID MY22 காரின்க்ளைம்பர் ரேஞ்ச்சானது நியூ டூயல்-டோன் ஃப்ளெக்ஸ் வீல்களுடன் பலகலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த ஹேட்ச்பேக் Automatic Climate Control அம்சத்துடன் லேட்டஸ்ட் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் கொண்டு வாகனத்தில் பயணிப்போரை பாதுகாக்கிறது.

டாடா பஞ்ச் :

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் அம்சத்துடன் ரூ.5,99,000 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் இருந்து கிடைக்கும் Tata Punch SUV காரானது 87mm கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 366 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. 7in ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ள இந்த கார் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டிகளை உள்ளடக்கிய பல செயல்பாடுகளை வழங்குகிறது. இந்த SUV-யில் 15 அல்லது 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ :

இந்த கார் ரூ.7,72,000 (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த கார் Eco, Normal மற்றும் Sport ஆகிய 3 டிரைவிங் மோட்ஸ்களை யூஸர்களுக்கு வழங்குகிறது. இதில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் தவிர ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ambient லைட்டிங் மற்றும் ஆட்டோ ஹெல்தி ஏர் ப்யூரிஃபையர் போன்ற அம்சங்கள் உள்ளன.

Chella

Next Post

முன் விரோதம் பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிப்படுகொலை……! செய்யப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்……!

Tue Jun 27 , 2023
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவகிராமத்தில் மதியழகன் மற்றும் மதிவாணன் உள்ளிட்ட இருவருக்கிடையே ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மதிவாணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதிவாணனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே […]

You May Like