fbpx

ஸ்மார்ட் டிவி வாங்கப் போறீங்களா..? வெறும் ரூ.6,000 தான்..!! இதையும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க..!!

அமெரிக்காவைச் சேர்ந்த நுகர்வோர் மின்சாதன நிறுவனமான வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse), இந்திய சந்தையில் புதிதாக குவாண்டம் சீரிஸ் மற்றும் Pi சீரிஸ் பெயரில் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் குவாண்டம் சீரிஸ் 55 இன்ச் மாடலும், Pi சீரிசில் 24 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் (24 இன்ச் HD டிவி மற்றும் 40 இன்ச் FHD டிவி)

புதிய Pi சீரிஸ் 24 இன்ச் HD 1366×768 பிக்சல், 40 இன்ச் FHD 1920×1080 பிக்சல் டிஸ்ப்ளே, லினக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கின்றன. இரு மாடல்களிலும் 512MB ரேம், 4 ஜிபி ரோம், 2 HDMI கனெக்டர்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 24 இன்ச் மாடலில் டைப் 2 ஸ்பீக்கர்கள், 20 வாட் திறன் கொண்டுள்ளன. 40 இன்ச் மாடலில் 30 வாட் ஸ்பீக்கர்கள், டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் மற்றும் டிஜிட்டல் நாய்ஸ் பில்ட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் A35x4 பிராசஸர், A+ பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட் HD ரெடி டிவி மாடலில் ஏராளமான செயலிகள் மற்றும் கேம்ஸ் உள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

* வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் 24 இன்ச் HD – ரூ. 6,999

* வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் 40 இன்ச் FHD – ரூ. 13,499

* வெஸ்டிங்ஹவுஸ் டிவி குவாண்டம் 55 இன்ச் UHD – ரூ. 29,999

புதிய வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை இன்று துவங்குகிறது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

Chella

Next Post

மின்சாரத்தைக் கொண்டு செல்ல புதிய நடைமுறை...! மத்திய அரசுக்கு பரிந்துரை...!

Wed Mar 8 , 2023
மின்சாரத்தைக் கொண்டு செல்லும் நடைமுறையில் நவீனத்தையும், வேகத்தையும் இந்தியா கொண்டிருக்க வேண்டும் என்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டப் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கடந்த வாரம் அறிவித்தார். மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்க வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை அடைய மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் நவீன கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்று […]

You May Like