fbpx

டிவி வாங்கப் போறீங்களா..? இந்த டிவிக்களின் விலை அதிரடி குறைப்பு..!! இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்க..!!

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் டிவி மாடல்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அடிப்படை இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி குறைப்பால், டிவிக்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபன் செல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், டிவிக்களின் விலை அதிகபட்சம் 5 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது. எல்இடி டிவிக்களை உற்பத்தி செய்வதற்கான 60 முதல் 70 சதவீத கட்டணத்தை ஒபன் செல் பேனல்களே எடுத்துக் கொள்கின்றன. இதுபோன்ற பேனல்களை பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.

“தொலைகாட்சிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டிவி பேனல்களின் ஒபன் செல் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 2.5 சதவீதமாக குறைக்க முன்மொழிகிறேன்” என பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த அறிவிப்பு உள்நாட்டு சேவை மதிப்பை கூட்டுவதோடு, சந்தை வளர்ச்சிக்கு உதவும் என நுகர்வோர் மின்சாதன மற்றும் வீட்டு உபயோகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் எரிக் பிரகான்சா தெரிவித்தார். பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கான உரிமம் வைத்திருக்கும் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக், இந்திய சந்தையில், சுங்க வரி 2.5% ஆக குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து டிவிக்களின் விலை 5 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிவிக்களின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்படலாம் என SPPL தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அன்வீத் சிங் மர்வா தெரிவித்தார்.

Chella

Next Post

Hero நிறுவனத்தில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Fri Feb 3 , 2023
Hero நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Engineer Proto Veh Assembly பணிக்கு நிறுவனத்தில் பணிக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த 4 ஆண்டு அனுபவம் வைத்திருக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் […]

You May Like