fbpx

புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா..? ரூ.74 வரை தள்ளுபடி..!! அதிரடியாக அறிவித்த ஹோண்டா நிறுவனம்..!!

நீங்கள் புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், உங்களுக்கான ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஹோண்டா கார்ஸ் இந்தியா, மிகப்பெரிய தள்ளுபடி ஒப்பந்தங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய கார் வாங்குபவர்களுக்கு இது ஒரு சூப்பர் டீல் ஆகும். ஹோண்டா சிட்டி, சிட்டி ஹைப்ரிட், அமேஸ் போன்ற கார்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. எந்த காரில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மேலும், இந்த சலுகைகள் அனைத்தும் ஆகஸ்ட் இறுதி வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா 5-வது ஜெனெரஷன் சிட்டி கார் ரூ. 73,946 தள்ளுபடி கிடைக்கிறது. இதில், ரொக்க தள்ளுபடி ரூ. 10 ஆயிரம் ஆகும். ரூ.10,946 வரை இலவச பாகங்கள் அடங்கும். லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் வரை உள்ளது. ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸின் கீழ் ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். மேலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 10 ஆயிரம் கிடைக்கும். கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 8 ஆயிரம் வரையிலும், சிறப்பு நிறுவன தள்ளுபடி ரூ. 20 ஆயிரம் வரையிலும் கிடைக்கிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 11.57 லட்சம் ஆகும்.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இந்த காரின் விலை ரூ.18.89 லட்சம் முதல் ரூ.20.39 லட்சம் வரையில் கிடைக்கிறது. மேலும் அமேஸ் காரில் ரூ. 23 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதில், ரொக்க தள்ளுபடி ரூ.10 ஆயிரம் வரை உள்ளது. இலவச இதர கருவிகள் ரூ. 12,296 வரையும், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் வரையும் கிடைக்கும். மேலும், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 6 ஆயிரம் வரை கிடைக்கிறது. இந்த காரின் விலை ரூ. 7.05 லட்சம் முதல் ஆரம்பிக்கிறது.

Chella

Next Post

ராகுல் காந்தி "flying kiss" கொடுத்தார்..! மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி..! சபாநாயகரிடம் புகார்…

Wed Aug 9 , 2023
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி flying kiss கொடுத்தார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு. சபாநாயகரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும், நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். மேற்கண்ட கோரிக்கைகளுக்கு […]

You May Like