fbpx

அட்டகாசமான விமானம்..!! இனி நீரிலும் வானிலும் பயணிக்கலாம்..!! சிறப்பம்சம் என்ன?

நீர் மற்றும் வானில் பறக்கும் விமானம் ஒன்றை சீன நிறுவனம் தயாரித்துள்ளது.

அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது நீரிலும் வானிலும் பயணிக்கும் திறன் படைத்த விமானங்கள் வரை உலகம் வளர்ச்சி கண்டுள்ளது. சீனா நிறுவனம் விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த விமானம் நீர் மற்றும் வானில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு 12 டன் தண்ணீரை எடுத்துக்கொண்டு பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அட்டகாசமான விமானம்..!! இனி நீரிலும் வானிலும் பயணிக்கலாம்..!! சிறப்பம்சம் என்ன?

AG 600 M என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், நீர்நிலைகளில் பயணிக்கும்போது 15 விநாடிகளில் 12 டன் தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டுள்ளது. காட்டுத்தீ, தீவிபத்து போன்ற பேரழிவு சூழ்நிலையில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தான் உறிஞ்சியெடுக்கும் நீரினை சரியான இடத்தில் தெளித்து பேரழிவை இந்த விமானத்தால் தடுக்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 560 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த விமானம் உச்சபட்சமாக 20 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சினேகன் மீது வழக்குப்பதிவு..!! விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!! ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி

Wed Sep 28 , 2022
பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய சினேகம் அறக்கட்டளை தொடர்பாக கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் […]
சினேகன் மீது வழக்குப்பதிவு..!! விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!! ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி

You May Like