fbpx

’அடடே இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே’..!! இன்ஸ்டா ரீல்ஸை இவ்வளவு ஈஸியா டவுன்லோடு செய்யலாமா..?

முன்பு வெகு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் தற்போது மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் தங்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் தங்களைப் பற்றிய மற்ற தகவல்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அதில், தற்போது முன்னிலை வகித்து வருவது ரீல்ஸ் எனப்படும் வசதியாகும். முன்னர் இருந்த டிக்-டாக் செயலியை அடிப்படையாக வைத்து இந்த ரீல்ஸ் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 90 நொடிகள் வரை இருக்கும் இந்த வீடியோ தற்போது அதிக அளவு மக்களை சென்றடைகிறது. மேலும் பல கார்ப்பரேட் நிறுவனங்களும், வணிக நோக்கங்களோடு செயல்படும் நிறுவனங்களும் தங்களின் புதிய பொருட்களை மக்களிடையே கொண்டு செல்லவும், விளம்பரப்படுத்தவும் இன்ஸ்டாகிராம் உதவுகிறது. சாதாரணமாக பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை விட இந்த ரிலீஸ் மூலம் அதிக பார்வையாளர்கள் கிடைப்பதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

’அடடே இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே’..!! இன்ஸ்டா ரீல்ஸை இவ்வளவு ஈஸியா டவுன்லோடு செய்யலாமா..?

ஆனால் இதற்கு முன் வரை அவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் டவுன்லோடு செய்யும் வசதி இன்ஸ்டாகிராமில் கிடையாது. ஆனால், தற்போது இன்ஸ்டாகிராம் செயலியானது உங்களுக்கு பிடித்த ரீல்சை டவுன்லோடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு நீங்கள் மூன்றாம் தரப்பு செயலி ஒன்றை டவுன்லோடு செய்து அதன் மூலம் மட்டுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

’அடடே இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே’..!! இன்ஸ்டா ரீல்ஸை இவ்வளவு ஈஸியா டவுன்லோடு செய்யலாமா..?

இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது..?

  • முதலில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு சென்று நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் ரீல்ஸிற்கு செல்ல வேண்டும்.
  • பின்பு 3 புள்ளிகள் உடைய ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், லிங்க் என்ற பட்டனை தேர்வு செய்வதன் மூலம் அந்த ரீல்ஸினுடைய URL ஆனது காப்பி (copy) செய்யப்பட்டு விடும். பிறகு பிரவுசருக்கு சென்று com என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு ஏற்கனவே காப்பி செய்த URL-ஐ பேஸ்ட் செய்து, பிறகு சர்ச் என்ற பட்டனை தேர்வு செய்தவுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த ரிலீஸ்-ஐ டவுன்லோடு செய்ய முடியும்.
  • ஆனால், பப்ளிக் அக்கவுண்டுகளால் அப்லோடு செய்யப்பட்ட ரீல்ஸ் மட்டுமே உங்களால் டவுன்லோடு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • ஒரு வேலை பிரவுசருக்கு பதிலாக ஏதேனும் செயலி மூலம் டவுன்லோடு செய்ய விரும்பினால் அதற்கான செயலிகள் பலவும் ப்ளே ஸ்டோரில் இருக்கின்றன. அதில், உங்களுக்கு விருப்பமான செயலியை இன்ஸ்டால் செய்து நீங்கள் ரீல்ஸ் மட்டுமின்றி உங்களுக்கு பிடித்த இன்ஸ்டாகிராம் போஸ்டுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Chella

Next Post

உங்கள் ஐபோனில் ஏர்டெல் 5ஜி சப்போர்ட் ஆகலையா..? இதை செய்தால் மட்டும் போதும்..!!

Mon Dec 19 , 2022
இந்தியாவில் 5ஜி சேவையானது கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 1ஆம் தேதி சோதனை ஓட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட 5ஜி சேவை, பின்னர் படிப்படியாக முன்னணி நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் வழங்கி வருகின்றன. எனவே, முன்னணி நகரங்களில் வசிக்கும் மக்கள் 5ஜி சேவையை தற்போதே பெறலாம். புதிய ரக ஆப்பிள் ஐ ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு இப்போது […]
உங்கள் ஐபோனில் ஏர்டெல் 5ஜி சப்போர்ட் ஆகலையா..? இதை செய்தால் மட்டும் போதும்..!!

You May Like