வாட்ஸ்ஆப் குளோன் செயலியால் ஆபத்து இருப்பதாகவும் தனிப்பட்ட குறுந்தகவல்களை உளவு பார்ப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் செயலிகள் 390 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். உடனடி செய்திகளை பெறும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவமான இ.எஸ்.இ.டி., சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு அச்சுறுத்தல் விதிக்கும் வகையில் வாட்சாப் குளோனிங் செயலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் ஜ.பி. எனப்படும் செயலிகள் வாட்சாப்பின் மக்கள் தகவல்களை உளவு பார்ப்பதாக கூறியுள்ளது.
குளோன் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோர் வாயிலாக அணுக முடியாது எனவும் இணையதளங்களில் இருந்து பதவிறக்கம் செய்யும் வகையில் இந்த செயலிகள் செயல்படுகின எனவும் பாதுகாப்பு சோதனைகள் இல்லாததால் பல பதிப்புகள் இது போல உள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தேசிய அளவில் அதிக அளவிலான ஆன்ட்ராய்டு ட்ரோஜன் கண்டறிதல்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. இது வைரஸ் போல செயலிகளில் செயல்படுகின்றது. சிறந்த செயலிகளைப் போலவே செயல்படுவதாகவும் ஆனால் இது ஒரு வைரஸ் எனவும் எச்சரிக்கின்றது. இது 9.5சதவீதம் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என கூறப்படுகின்றது