fbpx

ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி..!! அதிரடி சலுகையை அறிவித்த ஹூண்டாய் நிறுவனம்..!! வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், இம்மாதம் கார்கள் மற்றும் SUV-களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது. அந்தவகையில், ஜூலை 2023இல் ஹூண்டாய் நிறுவனம் சில பிரபல கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. கிராண்ட் ஐ10 நியோஸ், Aura, ஐ20, ஐ20 என் லைன், Alcazar மற்றும் கோனா EV உள்ளிட்ட கார்களுக்கு நிறுவனம் சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. வென்யூ, வென்யூ என் லைன், வெர்னா, க்ரெட்டா மற்றும் டக்சன் போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை.

இதற்கிடையே, ஹூண்டாய் வழங்கும் தள்ளுபடிகளில் கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்ஸ் உள்ளிட்டவைகளும் அடங்கும். இந்நிலையில், குறிப்பிட்ட மாடல்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் தள்ளுபடி பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS) :

ஹூண்டாயின் இந்த என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் ரூ.38,000 வரை சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. Grand i10 Nios காருக்கு ரூ 25,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.3,000 வரை வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.5.73 லட்சம் முதல் ரூ.8.51 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஹூண்டாய் ஆரா (Hyundai Aura) :

ஹூண்டாய் Aura காருக்கு மொத்தம் ரூ.33,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியில் ரூ.20,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 ஆகியவை அடங்கும். மேலும், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.3,000 வழங்கப்படுகிறது. இதன் காரின் மதிப்பு ரூ.6.33 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) : 

i20 மற்றும் i20 N Line கார்களுக்கு மொத்தம் ரூ.20,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த காருக்கு ரூ.10,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த பிரபலமான ஹேட்ச்பேக் ரூ.10,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறுகிறது. இந்த காரின் விலை ரூ.7.46 லட்சம் முதல் ரூ.11.89 லட்சம் வரை இருக்கும் நிலையில், N Line-ன் விலை ரூ.10.19 லட்சம் முதல் ரூ.12.31 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் (Hyundai Kona EV) : 

ஹூண்டாய் நிறுவனம் அதன் Kona EV எலெக்ட்ரிக் வாகனத்திற்கு ஒரு லட்சம் வரை கேஷ் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. இந்த காம்பாக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரூ.23.84 லட்சம் முதல் ரூ.24.03 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. செயல்திறன் அடிப்படையில் இது ஒரு சிறந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஆகும். இந்த EV-ஐ ஒருமுறை முழுவதும் சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை செல்லலாம்.

ஹூண்டாய் அல்கசார் (Hyundai Alcazar) : 

இந்த SUV-யின் விலை ரூ.16.78 லட்சம் முதல் ரூ.21.13 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 2023-ல் இந்த காருக்கு மொத்தமாக ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ரூ.20,000 தள்ளுபடி கேஷ் டிஸ்கவுண்ட் வடிவில் வழங்கப்படுகிறது.

Chella

Next Post

காதலனுடன் வாழ ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி….! காதலன் கண்முன்னே சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…..!

Mon Jul 17 , 2023
நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்ப்பூரில் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி அவருடைய காதலன் முன்னிலையில், 3 கல்லூரி மாணவர்களால் கொடூரமான முறையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. 3 குற்றவாளிகள் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தன்னுடைய சொந்த ஊரான ஜோத்பூரில் நடைபெற்ற […]

You May Like