fbpx

Electric Scooter | ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ வரை பயணிக்கலாம்..!! அட்டகாசமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!!

ஆட்டோ மொபைல் துறையில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் தான் கோமகி நிறுவனம். இந்நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பிலும் களமிறங்கு கலக்கி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக விற்பனையாகி வரும் வெனீஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.67 லட்சம் ஆகும்.

இந்த ஸ்கூட்டரில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, எந்த காலத்திலும் தீ விபத்து ஏற்படாத வகையிலான ஸ்மார்ட் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகள் 5 மணி நேரத்துக்கு உள்ளாகவே முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்கிறது. டிரை கண்டிசனில் இருந்து 90% வெறும் 4 மணி நேரத்தில் சார்ஜ் செய்கிறது. இதற்காக போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியில் தீ பிடித்தாலும் அதிகம் பரவாமல் இருக்க இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் டிஎஃப்டி ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேவிகேஷன், சவுண்ட் சிஸ்டம், ரைடு செய்யும் போதே கால் செய்யும் வசதி இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பளிச்சென இருக்கும் முழு எல்இடி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டாரைப் பொறுத்தவரை 3,000 வாட்ஸ் மோட்டார் மற்றும் 50 ஆம்ஸ் கண்ட்ரோலர், ரிவர்ஸ் மோட் மற்றும் 3 கியர் மோட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஸ்கூட்டரில் எக்கோ, ஸ்போர்ட் மற்றும் டர்போ என 3 மோட்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சூப்பர் ஸ்டிராங்க் ஸ்டீல் பிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பான சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக இந்த ஸ்கூட்டரில் சிபிஎஸ் டபுள் டிஸ்க் மற்றும் கீ லெஸ் என்ட்ரி ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த அப்டேட்டட் கோமகி வெனீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனையாகிறது. வெனீஸ் ஸ்போர்ட் கிளாசிக் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1,03,900 என்ற விலையில் விற்பனையாகிறது. இது முழு சார்ஜில் 75- 100 கிமீ வரை பயணிக்கும். அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும்.

வெனீஸ் ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் அப்கிரேட் மாடல் ரூ.1,49,757 என்ற விலையில் விற்பனை ஆகிறது. இது முழு சார்ஜில் 200 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இறுதியாக வெனீஸ் அல்ட்ரா ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 300 கிமீ வரை ரேஞ்ச் தரும். இது அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த வாகனம் ரூ.1,67,500 என்ற விலையில் விற்பனையாகிறது.

Chella

Next Post

இந்தியாவில் பேராபத்தை ஏற்படுத்துமா எரிஸ் மாறுபாடு?… என்.டி.ஏ.ஜி.ஐ தலைவர் விளக்கம்!

Sun Aug 13 , 2023
உலகை அச்சுறுத்திவரும் எரிஸ் மாறுபாடு, இந்தியாவில் கொரோனா நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) தலைவர் மருத்துவர் அரோரா புதிய மாறுபாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சான்றாக, தற்போது புதிய மாறுபாடு உலகம் முழுவதும் பரவி உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாறுபாடு Omicron EG.5.1 அல்லது Eris என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிஸ் மாறுபாடு உலகம் முழுவதும் […]

You May Like