fbpx

ஜூலை 1ஆம் தேதி முதல் காரின் விலை அதிரடியாக உயருகிறது..!! அதிர்ச்சியில் கார் பிரியர்கள்..!!

பிரெஞ்ச் வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், இந்தியாவில் Citroen C3 கார்களை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. C5 Aircross SUV-க்குப் பிறகு, Citroen C3 ஹேட்ச்பேக் இந்தியாவில் நிறுவனத்தின் 2-வது மாடல் ஆகும். இந்நிலையில், சிட்ரோயன் சி3 ஹேட்ச்பேக் காரின் விலையை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது. நாட்டில் இந்த மாடல் ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.17,500 வரை விலை உயரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கார் 3 வெவ்வேறு வகைகளில் சாலையில் பயணிக்கிறது. லைவ், ஃபீல் மற்றும் ஷைன் ஆகிய 3 மாடல்கள் இதில் அடங்கும். Citroen C3 ஹேட்ச்பேக் 2022 ஆம் ஆண்டில் ரூ.5.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் லைவ், ஃபீல் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. ஷைன் வகை மட்டும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. சிட்ரோயன் கடந்த காலத்திலும் ஹேட்ச்பேக் விலையை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விலை உயர்வுக்குப் பிறகு, C3 காரின் ஆரம்ப விலை ₹6.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கிறது. தற்போது கூடுதலாக ரூ.17,500 வரை விலை உயர்ந்துள்ளது.

ஹேட்ச்பேக் 2 எஞ்சின் விருப்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. முதலில் 81 bhp, 115 Nm உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் கொண்ட வாகனமாகும். மற்றொன்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது. இது 109 bhp, 190 Nm திறனை வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுக்கு, கார் முறையே 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல் ஆகியவற்றைப் பெறுகிறது. பல சிறப்பம்சங்கள் கொண்ட Citroen C3 காரில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 4 ஸ்பீக்கர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட 10.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியன உள்ளன.

சமீபத்தில் பிஎஸ் 6 விதிமுறைகளைப் பின்பற்றி புதிய டர்போ-பெட்ரோல் வகையை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் புதிய தலைமுறை Puretech 110 Turbo இன்ஜினுடன், லிட்டருக்கு 19.3 (ARAI சான்று) மைலேஜுடன் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.8.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய மாடல் ESP, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், இன்ஜின் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப், TPMS போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த காரில் பட்டன் மூலம் சரிசெய்யக்கூடிய கண்ணாடிகள், பின்புற பார்க்கிங் கேமரா, பகல்/இரவு IRVM மற்றும் My Citroen Connect ஸ்மார்ட்போன் ஆகியவை உள்ளன.

Chella

Next Post

நாளை பீகார் புறப்படுகிறார்…..! முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக தெரியுமா…..?

Wed Jun 21 , 2023
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மறுபடியும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான எதிரணியை ஏற்படுத்தும் நோக்கத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தவர் இதனால் நாளை மறுநாள் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 12ஆம் தேதி பாட்னாவில் நடக்க இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து காரணமாக 23ஆம் […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like