fbpx

உலக அளவில் ஒரே நேரத்தில் 2 லட்சம் பேர் பணிநீக்கம்…!! ஆட்குறைப்பு சீசன் இன்னும் முடியவில்லை!! நிபுணர்கள் பகீர் !!

மெட்டா, டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து 2 லட்சம் பேரை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் இன்னும் மோசமான நிலை வரவுள்ளது என்று எச்சரிக்கின்றனர்.

அக்டோபர் 2022ல் மட்டும் இந்தியர்கள் 5,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 16,000 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதற்கிடையே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் பார்க்கும்போது சுமார் 2,12,100 ஐ தொட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றது.

டுவிட்டர் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்த நிலையில் உலக அளவில் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப துறைகள் உலக அளவில் மெட்டா நிறுவனம் 13 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது 11,000 பேர் ஆகும். அமேசான் கிட்டத்தட்ட 10,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளது. பிற பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊபர், ஏர்பிஎன்பி, ஜிட்லோ, காயின்பேஸ், லைப்ட், நெட்பிலிக்ஸ், ஸ்பாட்டிபை, பெலாட்டன், ஷாப்பிபை , ஸ்ட்ரைப் மற்றும் ராபின் ஹுட். ஆகிய நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தபட்டியலில் இந்தியர்களின் பெயர்களும் உள்ளன. பெரும்பாலும், கல்வி தொடர்பான நிறுவனங்களான பைஜுஸ், அன் அகாடமி, வேதாந்து, ஒயிட் ஹேட், ஜுனியர் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சோமேட்டோ உள்ளிட்ட உணவு வழங்கும் செயலிகள் நிறுவனம் கூட அறிவித்துள்ளது.

ஓலா நிறுவனம் 1000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது வரை 5000 இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். அதுவும் அக்டோபரில் மட்டும் என்பது அதிர்ச்சியான தகவல். 16000 இந்தியர்கள் இதுவரை வேலை இழந்துள்ளார்கள் என்று மற்றொரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. புதிதாக வேலைக்க சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர். மொத்தம் உலக அளவில் 2,17,100 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏன் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை? பெரும்பாலான நிறுவனங்கள் கூறும் முக்கிய காரணம் என்ன என்றால் கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலானோர் இணையதளத்தில் நேரத்தை செலவிட்டனர். தற்போது மீண்டும் தினசரி வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிவிட்டனர். மற்றொரு காரணம் அதிகரித்து வரும் பண வீக்கம் ஒரு காரணம். விளம்பரத்திற்காக பணத்தை செலவிட பிராண்டுகள் தயங்குகின்றன. இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க முடியவில்லை.

இது தொடர்பாக சில நிறுவனங்களின் நிபுணர்கள் கூறுகையில் தங்கள் நிதியாண்டு முடிவதற்குள் செலவைக் குறைக்கலர்ம என நினைக்கின்றன. உதாரணமாக ஒரு பணியாளரை பணிநீக்கம் செய்துவிட்டால் அடுத்த நிதியாண்டுக்குள் செலவு கணிசமாக குறையும். 3 மாதங்கள் சம்பளத்துடன் பணிநீக்கம் செய்தால் கூட லாபம் என நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தது என்ன?  தொழில்நுட்ப துறையில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிழந்து வருகின்றது.வல்லுநர்கள் கூறுவது என்ன என்றால் அடுத்து வரும் காலக்கட்டங்களில் இன்னும் பயங்கரமான அளவில் ஆட்குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். எனவே நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு மெதுவாக திரும்பும் என தெரிவிக்கின்றனர்.  

Next Post

டெல்லியில் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் மண்டை ஓடு மீட்பு… பரபரப்பு…

Tue Nov 22 , 2022
டெல்லியில் காதலனால் கொல்லப்பட்டு 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் உடல்பாகங்களை வீசிய நிலையில் போலீசார் மண்டை ஓடு ஒன்றை மீட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப்-ஷ்ரத்தா இருவரும் டேட்டிங் செயலியில் சந்தித்து பேசி, பழகி பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களின் காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோரை எதிர்த்து இமாச்சல் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவிட்டு இறுதியாக டெல்லிக்கு வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே […]

You May Like