fbpx

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யப் போறீங்களா? இது கொஞ்சம் படிச்சுப்பாருங்க.!

நாம் ஷாப்பிங் செய்யும் முறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி விட்டது ஆன்லைன் ஷாப்பிங்.
இணையக்கடைகளில் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே பொருட்களை வாங்குவது என்பது நிறைய உபயோகமாக இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கின் நன்மைகள் தீமைகள் பற்றி சற்று அலசுவோம்.

நன்மைகள்:

நமக்கு மட்டுமே பிடிச்சப் பொருளை யாரின் உதவியும் இல்லாமல் எந்த நேரமானாலும் ஆர்டர் செய்து குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

நாம் கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்கும் பொழுது மற்ற கடையின் விலையும் இந்த கடையின் விலையும் ஒப்பீடு செய்ய முடியாது. ஆனால் இணையக்கடைகளில் ஓப்பீடு செய்து, போக்குவரத்து செலவில்லாமல் அலைச்சல் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம்.

பொதுவாக கடைகளுக்கு செல்லும் போது கண்ணில் படும் பொருட்களையும் சேர்த்து வாங்க வாய்ப்பிருக்கிறது. இணையக் கடைகளில் நமக்கு வேண்டிய ஒரு பொருளை மட்டும் கூட நாம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

தீமைகள் :

இப்போதுள்ள இளைய தலை முறையினர்க்கு ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர் என்றாலே ஒரே குஷி தான். இதனால், விலைக் குறைவாக இருக்கிறதென்று தேவையே இல்லாத பொருளைக் கூட ஆர்டர் செய்து வாங்கி வைத்து கொள்கிறார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் நிறைய மோசடி நடக்கிறது. ஒரு பொருளின் விலையை மிகவும் குறைந்த விலையில் தருவதாக சொல்லி நம்மிடம் பணத்தை புடுங்கிக் கொண்டு பொருளை அனுப்பாமல் ஏமாற்றி விடுகிறார்கள். மேலும், வங்கி விவரங்களையும் திருடிக் கொள்கிறார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்வதே நமக்குப் பிடித்தக் கலர் அல்லது அளவில் அந்த பொருள் கிடைக்கும் என்று தான். ஆனால் வேறு கலரையோ அளவையோ, மேலும் பொருள்களை காலதாமதமாக நமக்கு கிடைக்கப் பெற செய்வது என்று கடுப்பை கிளப்புகிறார்கள்.

Baskar

Next Post

கோயில் கோபுரத்தின் மீது மோதிய விமானம் - கேப்டன் பலி...!

Fri Jan 6 , 2023
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மற்றும் மரத்தின் மீது மோதியதில் விமானி உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென, தாழ்வாக பறக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குடியிருப்பு பகுதியில் இருந்த கோயில் […]

You May Like