fbpx

இப்படி விலையை உயர்த்தினா எப்படி? ஷாக்கில் வாகன ஓட்டிகள்..! இந்த பைக் வாங்கலாமா?

பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை திடீரென உயர்த்தி, இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம் அறிவித்துள்ளது.

உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தங்களது பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு மாடல்கள் மற்றும் சந்தைக்கு ஏற்ப இந்த விலை உயர்வு மாறக்கூடும். இன்றைக்கு மக்கள் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதை விட இருசக்கர வாகனங்களைத்தான் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இப்படி விலையை உயர்த்தினா எப்படி? ஷாக்கில் வாகன ஓட்டிகள்..! இந்த பைக் வாங்கலாமா?

இருசக்கர வாகனங்களில் நினைத்த இடத்திற்கு எந்த நேரத்திலும் செல்ல முடியும். எப்போது வேண்டுமானாலும் வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்பது போன்ற பல காரணங்களுக்காகவே பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, பண்டிகைக்காலம் நெருங்கும் சமயத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் தள்ளுபடியை அறிவிக்கும் என்பதால் அதற்காக மக்களில் சிலர் காத்திருப்பார்கள். இதுபோன்ற மனநிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றும் அளிக்கும் விதமாகதான் உள்ளது. தற்போது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ள பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை உயர்வு, தற்போது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற பல காரணங்களால் ரூ. 1000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இப்படி விலையை உயர்த்தினா எப்படி? ஷாக்கில் வாகன ஓட்டிகள்..! இந்த பைக் வாங்கலாமா?

இந்தியாவில் Hero MotoCorp இன் தற்போதைய தயாரிப்பு போர்ட்ஃபோலியோ ரூ.55,450 முதல் ரூ.1,36,378 வரையிலான பதினான்கு மோட்டார் சைக்கிள்களையும் (எக்ஸ்-ஷோரூம்) ரூ.66,250 முதல் ரூ.77,078 வரையிலான நான்கு ஸ்கூட்டர்களையும் உள்ளடக்கியது (எக்ஸ்-ஷோரூம்). இதில் விலையைத் தவிர வாகனங்களில் எவ்விதமான மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி விலையை உயர்த்தினா எப்படி? ஷாக்கில் வாகன ஓட்டிகள்..! இந்த பைக் வாங்கலாமா?

விலை உயர்ந்துள்ள பைக்குகளின் பட்டியல்:

Splendor+: ரூ.70,658

Splendor+ XTEC: ரூ 74,928

எச்எஃப் டீலக்ஸ்: ரூ 59,890

HF 100: ரூ 55,450

Glamour XTEC: ரூ 84,220

Passion XTEC: ரூ 75,840

சூப்பர் ஸ்பிளெண்டர்: ரூ.77,500

கிளாமர் : ரூ 77,900

கிளாமர் கேன்வாஸ்: ரூ. 80,020

பேஷன் ப்ரோ: ரூ 74,290

எக்ஸ்ட்ரீம் 160ஆர்: ரூ 1,17,748

XTREME 200S: ரூ 1,34,242

XPULSE 200 4V: ரூ 1,36,378

XPULSE 200T: ரூ 1,24,278

விலை உயர்ந்துள்ள ஸ்கூட்டர்களின் விலை பட்டியல்:

Pleasure+: Rs 66,250

டெஸ்டினி 125 XTEC: ரூ. 70,590

புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125: ரூ. 77,078

மேஸ்ட்ரோ எட்ஜ் 110: ரூ. 66,820

Chella

Next Post

அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்..!! இந்த பிரச்சனையை கையாள்வது சிரமம்தான்..!! ஷாக் கொடுக்கும் பிரதமர்..!!

Sun Sep 25 , 2022
பருவநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிவிங்கிகளை கண்காணிக்கவும், பார்வையாளர்கள் பார்வையிடவும் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம். […]
’ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’...!! பிரதமர் மோடியின் புதிய திட்டம்..!!

You May Like