fbpx

மழை வெள்ளங்களில் இருந்து உங்கள் வாகனங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

ஆற்றின் மேல் இருக்கும் பாலங்கள் மற்றும் சாலைகள் உடைவது, ஆற்று வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவது போன்ற பல வீடியோக்களை நாம், சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். அந்தவகையில், நீங்கள் உயரமான மலைப்பகுதிகளில் வசிப்பவர் என்றால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளங்களை சமாளித்து உங்கள் கார்களையும், உங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்றவை ஏற்படும் என்பதை நம்மால் முன்னரே கண்டறிய முடியாது. இவை திடீரென ஏற்பட கூடியவை. எனினும் நிலச்சரிவு அல்லது திடீர் வெள்ளம் ஏற்பட உள்ள வாய்ப்பை சில விஷயங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு மலைப்பாங்கான பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஒரு ஆறு இருந்தால் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், இடைவிடாது தொடர் கனமழை பெய்தால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், நீங்கள் வாகனத்தை ஓட்டி செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கிய பள்ளங்கள் அல்லது சாலை விரிசல்கள் தென்படுகிறதா என பார்த்து கவனமுடன் செல்ல வேண்டும். நீர்நிலைகளுக்கு அருகில் வாகனங்களை இயக்கி செல்லும் போது அதன் நீர்மட்டங்களில் அசாதாரண திடீர் மாற்றங்கள் நிகழ்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

ஆபத்தான பகுதியில் கார் பார்க்கிங்…

மழைநேரங்களில் உயரமான குன்று அல்லது பாறைகளின் விளிம்பில், அதைச் சுற்றி சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ள ஆபத்தான இடங்களில் உங்கள் காரை நிறுத்துவதை தவிர்க்கவும். ஏனென்றால், நிலச்சரிவு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் பாறை அல்லது குன்றின் மீது அல்லது விளிம்பில் வாகனத்தை நிறுத்துவது ஆபத்தானது. மேலும், பார்க்கிங் இடத்தை சுற்றி சரிவுகள் இருந்தால் நிலச்சரிவு ஏற்படும் போது பாறைகள் மேலே இருந்து கீழே உருண்டு வாகனத்தை இடித்து தள்ளிவிட கூடும்.

நிலச்சரிவுகள் அல்லது திடீர் வெள்ளம் ஏற்படும் போது உரத்த அசாதாரண ஒலி நிச்சயம் கேட்கும். பெரிய பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதினாலோ, மரங்களில் விரிசல் ஏற்பட்டாலோ சத்தம் வழக்கத்திற்கு மாறாக கேட்கும். எனவே வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் நீங்கள் வசித்தாலோ அல்லது வாகனம் இயக்கினாலோ இதுபோன்ற அசாதாரண ஒலிகள் கேட்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

ரேடியோ ஸ்டேஷன்கள் அடிக்கடி வானிலை அறிவிப்புகளை வெளியிடுகின்றன. நவீன காராக இருந்தாலும் அதில் ரேடியோவை உள்ளடக்கிய ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அல்லது திடீர் வெள்ளம் ஏற்பட்டால் அது குறித்த செய்தி அல்லது எச்சரிக்கை லோக்கல் ரேடியோ ஸ்டேஷன்களில் வெளியிடப்படும். எனவே, ரேடியோ ஸ்டேஷன்கள் வெளியிடும் அப்டேட்ஸ்களை அவ்வப்போது செக் செய்து கொள்ளுங்கள்.

Chella

Next Post

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இல்லையா..? திமுக-வின் ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான்..!! பரபரப்பை கிளப்பிய அரசியல் புள்ளி..!!

Thu Jul 13 , 2023
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் […]

You May Like