fbpx

”இனி பைக்கே தேவையில்ல போல”..!! தரமான 2 இ-சைக்கிள்கள் அறிமுகம்..!! இவ்வளவு வசதிகள் இருக்கா..? 60 கிமீட்டராம்..!!

மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான விர்சுஸ் மோட்டார்ஸ் இந்தியாவின் இ-சைக்கிள் சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. அவை, ஆல்ஃபா ஏ (Alpha A) மற்றும் ஆல்ஃபா ஐ (Alpha I) ஆகும். இந்த இரண்டும் இந்திய விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் வாங்குபவர்களுக்கு சலுகை விலையில் விற்பனைக்கு வழங்கவும் விர்சுஸ் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அறிமுகமாக விலை ரூ. 15,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையில் முதல் 50 வாடிக்கையாளர்களால் மட்டுமே இ-சைக்கிளை வாங்கிக் கொள்ள முடியும். ஒரு வேளை நீங்கள் 51 நபராக இந்த இ-சைக்கிளை வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு ரூ. 17,999-க்கு அதே மின்சார சைக்கிள் விற்கப்படும். ஆனால், இதே விலையிலும் அனைவரும் விர்சுஸின் எலெக்ட்ரிக் சைக்கிள் கிடைத்துவிடாது. முதல் 100 வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு அடுத்தபடியாகவும் ஓர் சிறப்பு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 19,999 இதுவே அந்த விலை ஆகும். இந்த விலையில் எத்தனை பேருக்கு அது இ-சைக்கிளை விற்கும் என்பது தெரியவில்லை. ஆனால், எலெக்ட்ரிக் சைக்கிளின் ஒரிஜினல் விலை ரூ. 24,999 என்று கூறப்படுகின்றது. இறுதியாக இந்த விலையிலேயே விர்சுஸின் இ-சைக்கிள் விற்கப்படும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதேவேளையில், இதிலும் நிறுவனம் சிறப்பு சலுகை வழங்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை முன்னிட்டே சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய இ-சைக்கிள்களை பலரின் ஃபீட்பேக்கைக் கேட்டு வடிவமைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. அதாவது, எல்சிடி திரைகள் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக முன் பக்கத்தில் சஸ்பெஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக 36V 8.0 Ah பேட்டரி, எலெக்ட்ரிக் சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஆல்ஃபா ஐ மற்றும் ஆல்ஃபா ஏ ஆகிய இரண்டிலும் 250W ஹப் மோட்டாரே (Hub Motor) பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ வேகம் ஆகும். மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பெடல் அசிஸ்ட்டில் 60 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

Chella

Next Post

மறைந்த இயக்குனர் சித்திக்கிற்கு, நடிகர் மம்மூட்டி ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி.., இன்று மாலை 6 மணிக்கு இறுதி ஊர்வலம்...

Wed Aug 9 , 2023
கேரளா, நேற்றிரவு மறைந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சித்திக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கடவந்திரா உள்விளையாட்டு அரங்கில் குவிந்தனர். நடிகரும் இயக்குனருமான லால், வினீத், ஜெயராம், கே.எஸ்.பிரசாத், டொவினோ தாமஸ், மிதுன் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அதிகாலையில் வந்திருந்தனர். மேலும் நடிகர் ஃபஹத் ஃபாசில், ஜனந்தனன், சிபி மாலில், லால்ஜோஸ், பி உன்னிகிருஷ்ணன், ஜீனத், நடிகர் சித்திக், இந்திரன்ஸ்,பெஞ்சமின், ஆலப்பி அஷ்ரப் உள்ளிட்டட […]

You May Like