இந்திய சந்தையில் தாறுமாறாக விற்று தனக்கென ஒரு தடத்தை பிடித்த செல்டோஸ் தற்போது புதிய ரகத்தை களமிறக்கி இருக்கிறது. கியா நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டில் தனது முதல் செல்டோஸ் காரை அறிமுகம் செய்ததில் இருந்து இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது.
புதிய செல்டோஸ் ரக கார்களின் முன்பதிவு கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், ஒரே மாதத்தில் 31,716 கார்களுக்கு முன்பதிவுகளைப் பெற்று கியா நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. புதிய காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.89 லட்சத்தில் இருந்து 19.99 லட்ச ரூபாய் வரை உள்ளது.
புதிய செல்டோஸ் காரில் பெவ்டர் ஆலிவ், இம்பீரியல் ப்ளூ, இன்டென்ஸ் ரெட், கிளேசியர் வைட் பெர்ல், கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பெர்ல், ஸ்பார்கிளிங் சில்வர் என 7 நிறங்களிலும், இரண்டு டுயல் டோனிலும் செல்டோஸ் 2023 சந்தையில் விற்பனைக்கு வருகிறது. காரின் நீளம் 4365 மிமீ. உயரம் 1620 மிமீ. அகலம் 1800 மிமீ ஆகும்.
ஸ்மார்ட் ஸ்ட்ரீம் ஜி1.5 6எம்.டி, 1.5 லீட்டர் CRDi VGT 6iMT ஆகிய இரு எஞ்சின் தேர்வுகளில் செல்டோஸ் கிடைக்கிறது. மேலும் 6 ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேகிங் சிஸ்டம், பிரேக் ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், வெஹிகில் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், எலெக்ட்ரானிஸ் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆல் வீல் டிஸ்க் பிரேக்ஸ், ஹைலைன் டயர் பிரஷர் மானிட்டர், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், எமெர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், இம்பேக்ட் சென்சிங் ஆட்டோ டோர் அன்லாக், 5 சீட் பெல்ட்ஸ் ஆகியவை இதில் அடங்கும்.