fbpx

வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட் கொடுத்த மெட்டா நிறுவனம்..!! இனி 32 பேருடன் பேசலாம்..!!

வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம் மூலம் 32 நபர்களுடன் வீடியோ கால் பேசும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், தற்போது விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒரே நேரத்தில் 32 பேருடன் வீடியோ கால் பேச முடியும். ஏற்கனவே 8 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி இருந்த நிலையில், தற்போது மெட்டா நிறுவனம் அதனை விரிவுப்படுத்தி 32 பேருடன் வீடியோ பேசும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்:

விண்டோஸிற்கான டெஸ்க்டாப் வாட்ஸ்-அப் செயலி, மெட்டா நிறுவனத்தின் பிற பயன்பாடுகளைப் போன்றே அதாவது மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட பல சாதனங்களில் செய்தி அனுப்புதல், மீடியா மற்றும் அழைப்புகளுக்கு வழங்கப்பட்டதை போன்ற எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சத்தை பெற்றுள்ளது.

Chella

Next Post

’என் பையன் என்னை விட பெரிய லூட்டில்லாம் அடிச்சிட்டு இருக்கான்’..!! மகனுக்கு அட்வைஸ் சொன்ன உதயநிதி..!!

Thu Jun 29 , 2023
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய காதல் கதையை கலகலப்பாக பேசியுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியான மாமன்னன் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை நிறைவுச் செய்தார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், சுனில் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் […]

You May Like