ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ், கடந்த 3 மாதங்களில் சுமார் ஒரு மில்லியன் பயனர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஓடிடி தளங்களிலேயே உலக அளவில் முன்னணியில் இருப்பது நெட்பிளிக்ஸ் தான். நெட்பிளிக்ஸ் உள்ள பல்வேறு நாடுகள் மற்றும் மொழிகளில் இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்களை காண்பதற்காகவே நெட்பிளிக்ஸை ஏராளமான பயனர்கள் விரும்பி சப்ஸ்கிரைப் செய்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களும் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்தன. அதிலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளமானது அசுரத் தனமான வளர்ச்சியை பெற்றது.

ஆனால், கடந்த 3 மாதங்களில் சுமார் ஒரு மில்லியன் பயனர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பயனர்கள் தங்களது பாஸ்வேர்டை நண்பர்களிடம் பகிர்வதை தடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொண்டு வந்தது. இதன் காரணமாகவே ஒரு மில்லியன் பயனர்களை நெட்பிளிக்ஸ் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்த காலாண்டில் சரிசெய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நெட்பிளிக்ஸ் – மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், குறைந்த விலையில் சப்ஸ்கிரிப்சன்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.