உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இந்நிலையில், வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் அதன் பயனர்களை QR குறியீடு வழியாக ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மாற்ற அனுமதிக்க இருக்கிறது. WaBetaInfo இன் அறிக்கையின்படி, வாட்ஸ் அப்பில் இனி மீடியா ஃபைல்களை கூகுள் டிரைவ் உள்ளிட்ட எதிலும் நீங்கள் பேக் அப் செய்யத் தேவையில்லை. இனி QR கோடு மூலமாகவே ஒரு செல்போனில் இருந்து மற்ற செல்போனிற்கு தரவுகளை (Data) மாற்றிக் கொள்ள முடியும். இந்த அம்சம் எப்போது வெளிவரத் தொடங்கும் என்பது குறித்து விவரம் வெளியாகவில்லை என்றாலும், பலருக்கும் இந்த அம்சம் உபயோகமாக இருக்கும்.
புதிய Android சாதனத்தில் WhatsApp-ஐ பதிவிறக்குவதன் மூலம் தரவு இடம்பெயர்வு செயல்முறை தொடங்குகிறது. புதிய அம்சத்துடன், பயனர்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போனில் உள்ள QR குறியீட்டை தங்கள் பழைய போனில் இருந்து ஸ்கேன் செய்ய வேண்டும். உங்கள் கணினியில் பயன்பாட்டைப் பதிவிறக்காமல் வாட்ஸ்அப் வலையைப் பயன்படுத்தும் தற்போதைய திறனைப் போலவே இந்த அம்சம் தெரிகிறது. பயனர்களின் தனிப்பட்ட செய்திகள் இன்னும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.