ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வசதி, 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும்.
இந்நிலையில் ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் இந்தியாவில் ரூ.12,000 விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள்: 6.67-இனச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ SoC) வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள (Android 14 OS) வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 8 எம்பி கேமராவைக் கொண்டுள்ளது/
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் ஃபேஸ் அன்லாக் (face unlock) போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.
டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.2, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். குறிப்பாக ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் ஆனது கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.