fbpx

உங்க ஆதார் விவரத்தை புதுப்பிக்க அதிக பணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம்…! எப்படி தெரியுமா…?

ஆதார் விவரங்களை புதுப்பிக்க உங்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம்.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் இலவசமாக வழங்கப்படும் ஆவணமாகும். ஆதார் அட்டை பயன்படுத்தி எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதற்கு விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று சேவையை பெறலாம். இணையதளம் மூலம் இதனை மேற்கொள்ள தெரியாதவர்கள் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று புதுப்பிக்கலாம்.

இருப்பினும் விதிகளை மீறி, பல ஆதார் மையங்கள் 50 முதல் 1000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆதாரில் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை புதுப்பிப்பதற்காக அதிகபட்சம் ரூ.50 வசூல் செய்ய வேண்டும் . அதை மீறி உங்களிடம் கட்டணம் வசூல் செய்தால் நீங்கள் 1947 யில் புகைரளிக்கலாம் அல்லது இணையதளம் மூலம் சென்று புகார் அளிக்கலாம்.

இணையதளம் மூலம் புகார் அளிப்பது எப்படி…?

முதலில் https://myaadhaar.uidai.gov.in/ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் Complain Submit என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து உங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் மாநிலம் தொடர்பான தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.பின்னர் Complain Type என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக பதிவு செய்தல், ஆபரேட்டர் மற்றும் ஏஜென்சி விவரங்களை உள்ளிடவும். இதன் பிறகு CAPTCHA உள்ளிடவும். பின்னர் உங்கள் புகார் பதிவு செய்யப்படும்.

Vignesh

Next Post

வட இந்தியாவில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது..? இதுதான் காரணமா..?

Thu Jan 26 , 2023
கடந்த சில மாதங்களாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத், பரிதாபாத், குர்கான் போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்..? பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி, […]

You May Like