fbpx

மாணவர்கள் தான் டார்கெட்..!! இலவச லேப்டாப்..!! அள்ளிக்கொடுக்கும் சலுகைகள்..!! நீங்களும் மாட்டிக்காதீங்க..!!

தற்போதைய டிஜிட்டல் காலத்தில் ஹாக்கர்களால், ஏராளமான நபர்கள் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். வயது, பாலினம், எந்த வேலை செய்கிறார் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை இந்த மோசடி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, மாணவர்களை மட்டும் டார்கெட் செய்யும் ஸ்கேம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். தற்போது அதை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

முன்னணி ஆன்ட்டி-வைரஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கி இதைப்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதுமே மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நிலையில், அவர்களை குறிவைக்கும் பல மோசடி அரங்கேறி வருகிறது. தேர்வுகளுக்கு தயாராவது, கல்வி, பாடம் சம்பந்தமான பொருட்களை வாங்குவது உள்ளிட்டவை சார்ந்த மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய விஷயங்களை நோக்கி ஃபிஷிங் விளம்பரங்கள் அதிகமாக காணப்படுகிறது.

மாணவர்களை எப்படி டார்கெட் செய்கிறார்கள்…?

இலவசமான பரிசுகளை வழங்குவது, லேப்டாப் வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு, இதை நீங்கள் செய்து முடித்தால் டேப்லட்டை வெல்லலாம் என்று போலியான விளம்பரங்களால் மாணவர்களின் கவனத்தை மோசடி கும்பல் ஈர்க்கிறது. இது போன்ற விளம்பரங்களை யார் கவனித்தாலும், முயற்சி செய்து பார்க்கலாமே என்று ஒரு முறை தோன்றும்..! இந்த விளம்பரங்களில் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் மாணவர் எந்த வகையான லேப்டாப் அல்லது டேப்லெட் விருப்பப்படுகிறார் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும்.

லிங்க் ஃபிஷ்ஷிங் மூலம் மாணவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட லிங்கை வாட்ஸ் அப்பில் 15 நபர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்படும். அதற்கு அடுத்ததாக குலுக்களில் பெறுவதற்கு கலந்துகொள்வதற்கு, எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்ய வேண்டும். கல்விக்கு உதவி செய்வதாக மாணவர்களை ஏமாற்ற தனி கும்பலே இயங்கி வருகிறது. இந்த மோசடியாளர்கள் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நிதியுதவியை ஸ்காலர்ஷிப் திட்டங்கள் வழியாக அளிப்பதாக கூறி ஏமாற்றுகின்றனர். இதில் உண்மையாகவே உதவி தேவைப்படும் மாணவர்கள் பலரும் ஏமாந்துள்ளனர்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி..?

இதுபோன்ற மோசடியான விளம்பரங்கள் அல்லது நிதியுதவி தருவதாக கூறப்படும் வாக்குறுதிகள், லிங்க்கை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவை போலி என்பதை சுலபமாக கண்டுபிடிக்க ஒரு சில வழிகள் இருக்கின்றன. நீங்கள் லேப்டாப்பை பரிசாக வென்றுள்ளீர்கள். ஆனால், லேப்டாப்பை உங்களுக்கு அனுப்புவதற்கான டெலிவரி கட்டணத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று தெரிவிப்பார்கள். இதன் மூலம், அது ஸ்கேம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

எச்சரிக்கை :

இணையத்தில் ஈர்க்கும் விளம்பரங்கள் மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது. விளம்பரங்கள், சலுகைகள் எல்லாம் உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்கள் தனிப்பட்ட விவரங்களை நம்பகமில்லாத நபர்களிடம் பகிராதீர்கள். நம்பிக்கையான, அதிகாரப்பூர்வமான சோர்ஸ்களில் இருந்து வரும் ஆஃபர்களை மட்டும் பயன்படுத்துங்கள். ஆன்லைனில் நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முதல் ஷாப்பிங் தளங்கள் வரை, லாகின் விவரங்கள், வங்கிக் கணக்கு, கார்டு விவரங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

Chella

Next Post

”பெண்கள் உடல் ரீதியாக எதிர்கொள்ளும் இயற்கை சுழற்சியை கூட தீட்டு என்றனர்”..!! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Fri Sep 15 , 2023
மகளிர் உரிமைத் தொகை எத்தனை ஆண்டுகள் வழங்கப்படுகிறதோ அத்தனை ஆண்டுகள் நான் ஆட்சி செய்வதாக அர்த்தம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று சிலர் கூறினார்கள். பொய் வதந்தி பரப்பி சிலர் திட்டத்தை […]

You May Like