Flipkart நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல வர்த்தக நிறுவனமான Flipkart நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில், Flipkart நிறுவனம் தற்போது புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, பிளிப்கார்ட் செயலி மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமார் 3 லட்சம் ஹோட்டல்களில் புக்கிங் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெரிதும் அறியப்படாத தளங்கள், தொழில் பயணங்கள், நீண்ட விடுமுறை என்று சுற்றுலாவில் புதிய ட்ரெண்டுகள் பிரபலமடைந்து வருகின்றன.

சுற்றுலாத் துறையானது கடந்த ஆண்டில் மட்டும் 70% வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 60% மொத்த சராசரி வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த பண்டிகை காலாண்டு மொத்த சுற்றுலாத்துறைக்கும் நல்ல காலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே Flipkart ஹோட்டல்ஸ் சேவை வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் ஹோட்டல் புக்கிங் வழங்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இனி பிளிப்கார்ட் ஆப்பிலேயே ஹோட்டல் புக்கிங் செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.