ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக 2 புதிய மலிவு விலை டேட்டா பேக்-களை அறிமுகப்படுத்தி உள்ளது. யூஸர்கள் தங்கள் ஆக்ட்டிவ் பேக்கின் டெய்லி டேட்டா லிமிட் காலியான பிறகும் தடையற்ற இன்டர்நெட் கனெக்டிவிட்டியை அனுபவிக்க உதவுகிறது. குறிப்பாக, டெய்லி டேட்டா முடிந்த பிறகு அதிக வேகத்தில் இன்டர்நெட்டைபயன்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த பிளான்கள் பயனுள்ளதாக இருக்கும். ரூ.19 மற்றும் ரூ.29 ஆகிய விலைகளில் இந்த புதிய 2 டேட்டா பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.
ஜியோ தற்போது அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய பிளான்கள் ஏர்டெல்லின் ரூ.19 மற்றும் ரூ.29 விலையில் உள்ள எக்ஸ்ட்ரா டேட்டா பேக்ஸ்களை போலவே உள்ளது. இது ஒரு நாளைக்கு 1GB மற்றும் 2GB டேட்டாவை வழங்குகிறது. ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஏர்டெல் பேக்ஸ்களைப் போல ஜியோவின் டேட்டா பேக்ஸ் நாள் முடிவில் காலாவதியாகாது.
ஜியோவின் ரூ.19 டேட்டா பேக்:
ஜியோவின் பட்டியலில் இருக்கும் இரண்டாவது மலிவான டேட்டா பிளான் இதுவாகும். இந்த டேட்டா பூஸ்டர் பிளான் ஆக்ட்டிவில் உள்ள ரீசார்ஜ் பிளானிற்கு டாப்அப் ஆக 1.5GB டேட்டாவை வழங்குகிறது. ஜியோ ஏற்கனவே ரூ.15-க்கு ஒரு டேட்டா பேக்-ஐ வழங்கி வருகிறது. இதில் 1GB டேட்டா வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக ரூ.4 செலுத்தி ரூ.19 டேட்டா பேக்-ஐ ரீசார்ஜ் செய்ததால் 500MB டேட்டா கூடுதலாக பெற முடியும்.
ஜியோவின் ரூ.29 டேட்டா பேக்:
இந்த புதிய ரூ.29 டேட்டா பேக்கானது 2.5GB டேட்டாவை யூஸர்களுக்கு வழங்குகிறது. ஏற்கனவே ஜியோ நிறுவனம் தனது யூஸர்களுக்கு ரூ.25 விலையில் 2GB டேட்டாவை வழங்கி வருகிறது. கூடுதலாக ரூ.4 செலுத்தி இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 500MB கிடைக்கும். மேற்காணும் 2 டேட்டா பூஸ்டர் பிளான்களின் வேலிடிட்டியும், யூஸர்களின் ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டியை கொண்டிருக்கும். யூஸர்கள் ஜியோ 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தினால் இந்த 2 டேட்டா பூஸ்டர்களும் 5ஜி டேட்டா ஸ்பீடை வழங்கும்.