fbpx

ரெட்மி யூசர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! ஆகஸ்ட் 1 முதல் விற்பனை..!! முன்பதிவும் இருக்காம்..!!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இன்று ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. பள்ளி குழந்தைகள் படிப்பதற்கும், கல்லூரி மாணவர்களுக்கும், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கும் இது மிகவும் உதவியாக இருந்தது. அதிலும் மன அழுத்தத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிறுவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ரெட்மி பயனாளர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ரெட்மி 12 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த போனை வாங்கும் ஆர்வம் உள்ள நபர்கள் இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கான விற்பனை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாங்க விரும்பும் பயனாளர்கள் முன்பதிவு செய்ய MI வலைதளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தனை விளம்பரம் செய்ய சியோமி நிறுவனம் பாலிவுட் நடிகையான திசா படானியை ப்ரோமாவிற்காக பயன்படுத்தி உள்ளது. மேலும், இந்த ரெட்மி 12 ஸ்மார்ட் போனில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளதாக சியோமி நிறுவனம் கூறியுள்ளது. அந்த வகையில், 50 MB பிரைமரி கேமரா, 6.79 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 8 MB அல்ட்ரா வைடு கேமரா, 5000 MAH பேட்டரி, IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிடென்ட், 2 MB மேக்ரோ சென்சார் மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’மக்களே குடையை மறந்துறாதீங்க’..!! இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யுமாம்..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Fri Jul 14 , 2023
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

You May Like