fbpx

சூப்பர்..!! அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் வீடியோக்களை இனி இலவசமாக பார்க்கலாம்..!! எப்படி தெரியுமா..?

அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களாக இருந்து வருகிறது. பெரும்பாலும் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் ஒன்றில் வெளிவரும் நிலை தான் தற்போதைக்கு இந்தியாவில் இருந்து வருகிறது. அதேநேரம் நீங்கள் இலவசமாக இந்த ஓடிடி தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அதாவது, ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடிய நபர்கள் போஸ்ட்பெய்டு திட்டத்தில் இணையும் பட்சத்தில் அவர்களுக்கு அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் தளங்களை இலவசமாக காண முடியும். அதே நேரம் ப்ரீபெயிட் திட்டத்தில் உள்ளவர்கள் 2 ஓடிடி தளங்களையும் ஒரே நேரத்தில் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. இதற்கு ஒரே வழி அவர்களும் போஸ்ட்பெய்டு திட்டத்துக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஜியோவை பொறுத்தவரை ரூ.699 போஸ்ட்பெயிட் திட்டத்தில் இணையும் பட்சத்தில் அவர்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்றவற்றுடன் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தற்போது, அமேசான் ஒரு மாதத்துக்கான இலவச ட்ரையல் சப்ஸ்கிரிப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வசதியை பெற அதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று அமேசான் பிரைம் வீடியோவை ஆக்சஸ் செய்து ஒரு மாதத்திற்கான இலவச ட்ரையல் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். எனினும் தற்போது வரை அமேசானில் கணக்கு வைத்திருக்காமல் புதிதாக இணைபவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கல்வி உதவித் தொகை வழங்குவதாக தெரிவித்து பெற்றோர்களிடம் 7 லட்சம் ரூபாய் மோசடி…..! 5 பேர் அதிரடி கைது கோவையில் பரபரப்பு…..!

Mon Jun 19 , 2023
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர் மாணவிகளின் பெற்றோருக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணிலிருந்து சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் அரசு கல்வி உதவி தொகை வழங்கும் பிரிவிலிருந்து பேசுவதாக தெரிவித்து உங்களுடைய குழந்தைகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் உதவித்தொகை பெறுவதற்கான க்யூ ஆர் குறியீட்டை whatsapp மூலமாக அனுப்பி வைப்போம் அதை ஸ்கேன் செய்தால் உதவி தொகை […]

You May Like