fbpx

புத்த மடாலயத்தில் உள்ள பள்ளி மீது குறிவைத்து; ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்குதல்..!

மியான்மரில் இருக்கும் பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் இருக்கும் லெட் யெட் கோன் என்கிற கிராமத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இங்குள்ள புத்த மடாலயத்தில் இருக்கும் பள்ளியின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஆர்டி வேர்ல்ட் என்கிற செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி சூட்டில் கொலை செய்ய பட்டனர். மற்றவர்கள் ராணுவத்தினர் கிராமத்திற்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.

மேலும் இறந்தவர்களின் உடல்கள் பின்னர் இராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி நடந்த சதிப்புரட்சியைத் தொடர்ந்து மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

ஹிஜாப் அத்தியாவசியமான நடைமுறை அல்ல – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்

Tue Sep 20 , 2022
இஸ்லாமிய நாடுகளில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய நடைமுறை அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு ஒன்றில் வாதம் நடத்தியுள்ளது. ஹிஜாப்புக்கு தடை விதித்தது  தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தனது வாதங்களை முன் வைத்தார். உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் , துஷர் மேத்தா கூறிய வாதத்தில் , […]

You May Like