இந்தியாவில் 5 ஜி சேவைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மோசடி கும்பலின் அட்டகாசமும் அளவில்லாமல் பெருகி வருகின்றது.
ஏற்கனவே டெக்னாலஜி வளர்ச்சி என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். ’ஏ.டி.எம். மேலே நம்பர் சொல்லுங்கோ உங்க கார்டை அப்டேட் பண்ணுங்கோ ’’ இந்த மாதிரி ஏகப்பட்ட மோசடி அரங்கேறி வருவது நமக்குத் தெரியும்.
5ஜி ஐ பயன்படுத்தி தற்போது புதுப்புது மோசடி நடந்து வருகின்றது. இதை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிஞ்சுக்கங்க.. 4 விதமான பொய்யான எஸ்.எம்.எஸ். வரும் . அதை நீங்க நம்பினா அவ்வளவுதான்.. எனவே இதில் நீங்க ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.
முதலாவது வாட்சாப் அல்லது உங்கள் இ மெயில் வழியாக எஸ்.எம்.எஸ். அல்லது லிங்க் அனுப்புவோம் அதை கிளிக் பண்ணுங்க உங்க போன் 5 ஜி ஆகிவிடும் என தெரிவித்தால் அது ஒரு மோசடி என தெரிந்துகொள்ளுங்கள். எந்த ஒரு லிங்கும் உங்கள் போனை 5 ஜி ஆக மாற்றாது.
அதையும் மீறி நீங்கள் அதை கிளிக் செய்தால் உங்கள் விவரங்கள் திருடப்பட்டு பணம் பறிபோவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளது.
இரண்டாவதாக நீங்கள் எந்த சேவை மையத்திற்கும் செல்ல வேண்டாம். நாங்களே வந்து உங்களுக்கு 5 ஜியாக மாற்றித் தருகின்றோம் என கூறினால் அதை நம்ப வேண்டாம். ஓடிபி கேட்டால் கூட அதை தெரிவிக்க வேண்டும் என சந்தாதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
3வது பொய், உங்கள் ஊரில் 5 ஜி இல்லை என்றாலும் நாங்கள் அந்த சேவையை வழங்குகின்றோம் என கூறினால் அதை நம்ப வேண்டாம். உங்களுக்கு அந்த சேவை கிடைக்கும் வரை காத்திருங்கள் ஏமாற வேண்டாம்.
4-வதாக 5 ஜி ஸ்மார்ட் போன் வாங்க வேண்டாம் 4 ஜி போனை நாங்க உங்களுக்கு 5 ஜியா மாத்தி தர்ரோம் . என கூறினால் அதை நம்பி யாரிடம் போனை கொடுக்க வேண்டாம். அவர்கள் கூறும் எதையும் நீங்கள் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.