பிரபல யு.பி.ஐ. செயலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மற்றொரு பிரபல நிறுவன செயலியின் லோகோவை காப்பி அடித்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியங்களுக்கு பயன்படுத்தும் ஒரு செயலி போன்பே. யுபிஐ செயலியான போன்பே வை காப்பி அடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மற்றொரு செயலி மொபைல் பே.. அதே போன்ற லோகோவை காப்பி அடித்து வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போன்பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர். இரு செயலிகளின் வணிக லோகோக்கள் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் சாதாரண பொதுமக்கள் பார்வையில் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. எனவே மொபைல்பே நிறுவனத்தின் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஆனால், ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து பதில் அளிக்க ஆப்பிள் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.