வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அப்டேட்டுகளை பயனர்களின் வசதிக்காக வழங்கி வருகிறது. பொதுவாக வாட்ஸ் அப் செயலியில் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், கேலரியில் உள்ள புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக பயனர்களுக்கு அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அப்டேட் பயனாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது மீண்டும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், வாட்ஸ்அப்பில் சாதாரணமாகவே ஹார்ட் உள்ளிட்ட சில எமோஜிகள் மட்டும் பெரிய அளவில் அனுப்ப முடியும். அதேபோன்று ஸ்டிக்கர்களையும் பெரிய அளவில் அனுப்பும்படியான புது அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது லேப்டாப் (அ) கணினி வழியில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதோடு பெரிய அளவிலான ஸ்டிக்கர்களை அனுப்பும் இந்த புது அப்டேட் சில மெட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.