துபாயில் பறக்கும் வகை காரை சோதனை செய்து சீன நிறுவனம் அசத்தி உள்ளது.
துபாயில் சீனாவின் புதிய அதிநவீன பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த வகை காருக்கு எக்ஸ் – 2 என பெயரிட்டுள்ளது. 2 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில் 2 இருக்கைகள் பொருத்தப்பட்டு கச்சிதமாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரையிறங்கும் வண்ணம் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் பெங் என்ற சீன நிறுவனம் இந்த காரை வடிவமைத்து தயாரித்து இருக்கும் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் கார் வகையைச் சேர்ந்த இந்த கார் பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எக்ஸ் 2 என பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரக நாடுகுளில் ஒன்றான துபாயில் வெற்றிகரமாக சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்களைப் போல 4 ப்ரப்பல்லர்களால் இயங்கும் இந்த வகை கார் விமானங்களைப் போல ஓடுதளத்தில் ஓடிய பின்னர் மெதுவாக பறக்கும்படி இல்லாமல் நேரடியாக தரையை விட்டு பறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற சோதனை ஓட்டம் வான்வெளி போக்குவரத்தில் ஒரு புதிய தொடக்கம் என்று இதனை தயாரித்துள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. பறக்கும் கார் சோதனை வெற்றி பெற்றுள்ளதால் விரைவில் ஐக்கிய அரபு நாடுகளில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.