fbpx

உங்கள் செல்போனிலும் 5 ஜி ஆக்டிவேட் செய்யலாம்… எப்படி தெரியுமா ?

இந்தியாவில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் உங்கள் மொபைலிலும் 5 ஜி சேவையை பெற முடியும் எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் 5 ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி சேவைகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் நான்கு நகரங்களில் 5 ஜி டெஸ்டிங்கை தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் முதல் முதலில் 5 ஜி சேவையை 8 மெட்ரோ நகரங்களில் வெளியிட்டுள்ளது.

5ஜி ஸ்மார்ட் போன்கள் அவசியமா? : இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கினால் கூட அதிக வேக 5 ஜி சேவையை பயன்படுத்த 5 ஜி ஸ்மார்ட் போன்கள் தேவைப்படுகின்றது. அல்லது நம்மிடம் உள்ள செல்போனில் 5 ஜி வசதியை ஏற்று அலைக்கற்றைக்க சப்போர்ட் செய்கின்றதா என தொழில்நுட்ப ரீதியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேலை ஸ்மார்ட் போனில் 5ஜி சப்போர்ட் செய்யப்படாதபட்சத்தில் நாம் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றது. இந்த சேவை மூலம் அதிவேக இன்டெர்னெட் வசதியை பெறலாம். இந்த ஆர்வத்தில் மக்கள் 5 ஜிக்கு மாறி வருகின்றனர். 5ஜி செட் அப் செல்போனில் எப்படி சோதனை செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

முதலில் சாம்சங் செல்போனில் செட்டிங்ஸ் – கனெக்‌ஷன்ஸ்.-மொபைல் நெட்வொர்க்ஸ்- நெட்வொர்க் மோட்- 5G/LTE/3G/2G (auto connect) என்பதில் தேர்வு செய்துகொள்ளலாம் அடுத்தாக கூகுள் பிக்சல் ஸ்டாக் ஆன்ட்ராய்டு போன்கள்- செட்டிங்ஸ் –நெட்வொர்க் மற்றும் இன்டெர்நெட் – சிம் – பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் – 5ஜி என்பதில் தேர்வு செய்ய வேண்டும்.

Next Post

என்னடா இதுசோதனை !மேலும் மேலும் கோளாறாகும் ’வந்தேபாரத் ’ ரயில் … சக்கரங்கள் ஜாமானாதால் பயணிகள் தவிப்பு ….

Sat Oct 8 , 2022
தொடர்ந்து -3வது நாளாக வந்தேபாரத் ரயில் கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றதால் பயணிகள் இன்றும் பாதிவழியில் தவித்தனர். வாரணாசிக்கு செல்லும் வந்தே பாரத் சக்கரங்கள் ’ஜாமானதால் ரயில் பாதிவழியில் நின்றது. நேற்று முன்தினம் எருமை மாடு மோதியதில் முன்பக்கம் தகர்ந்தது. நேற்று காளை மாடு மோதியதில் ரயில் சேதமடைந்தது. இன்று சக்கரங்கள் ஜாமாகி கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றது. காந்திநகர் – மும்பை இடையே கடந்த செப்டம்பர் 29ம் தேதி […]

You May Like