இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் துபாய் ஏர் ஷோ தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, ஹோஸ்ட் ஏர்லைன் எமிரேட்ஸ் தனது 40வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறது.
இந்த ஏர் ஷோ நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜர் போர் விமானம் இன்று துபாய் ஏர்ஷோவில் வானில் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு விமான சாகங்களை செய்து கொண்டிருந்தபோது இந்த போர் விமானம் திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது..
இந்த நிலையில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தின் விமானி உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.. இதுகுறித்து எக்ஸ் பக்க பதிவில் “ துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது ஐ.ஏ.எஃப் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்துவிட்டார்.. அவரின் இறப்புக்கு ஐ.ஏ.எஃப் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது மற்றும் இந்த துயரமான நேரத்தில் துயரமடைந்த குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாவது இது 2-வது முறையாகும். ஒற்றை என்ஜின் கொண்ட ஒரு தேஜஸ் போர் விமானம் கடந்த ஆண்டு மார்ச 12-ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் அருகே, பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளானது. எனினும், விமானி பாதுகாப்பாக பாராசூட்டில் மூலம் உயிர் தப்பினார்..
Read More : அசிங்கமான அவதூறு வார்த்தைகள்.. மாணவியின் புகார்களை கண்டுகொள்ளாத ஆசிரியைகள்.. CBSE விசாரணையில் பகீர் தகவல்..



