Flash : “உங்கள் கனவை சொல்லுங்க..” தமிழக அரசின் புதிய திட்டம்.. வரும் 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..! விவரம் இதோ..!

tamilnadu cm mk stalin

உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. 2030-ம் ஆண்டுக்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள கனவை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.. 15 வயது முதல் 29 வயதுடைய இளைய சமுதாயத்துடன் அவர்களின் கனவை கேட்டு நிறைவேற்றும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம்? உங்கள் கனவு என்ன? என்ற கேள்விகளை கேட்டு பதில் பெற முடிவு செய்துள்ளது.. செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும். ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தன்னார்வலர்களுக்கு வீடு வீடாக சென்று அவர்களின் கனவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்வார்கள்..

இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம்.. ஆட்சியர்கள் தலைமையில் கருத்தரங்கங்கள் நடத்தி பொதுமக்களின் கனவுகளை கேட்டறிய உள்ளோம்.. அயலக தமிழர்களிடமும் அவர்களின் கனவுகள் குறித்து கேட்டறிய உள்ளோம்..

உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் கனவை அறிய முயல்கிறோம்.. உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம்.. அரசு என்ன செய்தது? என்ன செய்ய வேண்டும்? 2030-க்குள் உங்கள் ஊர் சார்ந்த தேவை என்ன நிறைவேற்ற வேண்டும் என கேள்வி கேட்டு பதிலை பெற உள்ளோம்.. வரும் 9-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதல்வர் ஸ்டாலின் உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.. இந்த திட்டம் வரலாற்றில் மிகப்பெரிய திட்டம் இருக்கும்.. மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய மக்களிடம் இருந்தே கருத்துகளை கேட்டு செயல்படுத்த உள்ளோம்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

Breaking : கரூர் பெருந்துயரம்.. விஜய்க்கு சிபிஐ சம்மன்..! 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!

Tue Jan 6 , 2026
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல்  சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]
TVK Vijay 2025 2

You May Like