விஜய்யை முதலில் தனது காருக்கு Tax கட்ட சொல்லுங்க.. அப்புறம் ஊழல் பற்றி பேசலாம்.. எஸ்.வி.சேகர் கடும் தாக்கு!

vijay svee sekar

விஜய் முதல் தனது காருக்கு வரி கட்டட்டும்.. அப்புறம் குடும்பமாக கொள்ளையடிப்பது பற்றி இவர் பேசலாம் என்று எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

எஸ்.வி.சேகரின் தந்தை எஸ்.வி.வெங்கட்ராமன் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை அரசு வைத்துள்ளது.. இதையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் “ இது எங்க அப்பாவுக்கு கொடுத்த மிகப்பெரிய கௌரவம்.. என் அப்பா நூற்றுக்கணக்கான அனாதை பிணங்களை அடக்கம் செய்தவர்.. 86,000 பாட்டில் ரத்தம் சேமித்து கொடுத்தவர்.. அந்த சமூக சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் தான் இது.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பின்னால் நிற்பது எனது வாழ்நாள் கடமை.. 2026 தேர்தலில் திமுகவுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்வேன். ” என்று தெரிவித்தார்..


தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ எப்போதுமே வரலாறு மீண்டும் திரும்பாது சார்.. ஒருவரின் வெற்றி தோல்வி என்பது கூட்டத்தை வைத்து சொல்ல முடியாது.. சினிமாவில் விஜய் பெரிய நடிகர்.. அடுத்த ரஜினி என்று சொல்லலாம்.. இல்லை நானே ரஜினி என்று சொல்லிக்கொள்ளலாம்.. சினிமா வேறு.. அரசியல் என்பது அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசுவது.. ஆனால் விஜய் திமுகவை விமர்சனம் மட்டுமே செய்கிறார்.. ஆனால் நான் செய்யப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறாரா..?

ஒன்றுமே சொல்லவே இல்லை.. நான் உங்களுக்கு என்ன செய்யப்போகிறேன் என்று விஜய் சொல்லவே இல்லை.. திமுக எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.. குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம், மதிய உணவுத் திட்டம் என எவ்வளவு திட்டங்கள்.. ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறவர்களுக்கு தான் அது தெரியும்.. கேரவனில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு அது பற்றி தெரியாது..” என்று தெரிவித்தார்..

மேலும் முதல்வர் ஸ்டாலின் குடும்பமாக தமிழகத்தை கொள்ளையடிப்பதாக விஜய் விமர்சித்தது குறித்து பேசிய அவர் “ விஜய் முதல் தனது காருக்கு வரி கட்டட்டும்.. அப்புறம் குடும்பமாக கொள்ளையடிப்பது பற்றி இவர் பேசலாம்.. சினிமாவில் இருப்பவர்கள் ஊழல் பற்றி எல்லாம் பேசக் கூடாது.. ஜிஎஸ்டியை குறைத்துவிட்டோம் மக்களுக்கு எவ்வளவு நன்மை என்று வானதி சீனிவாசன் பேசுகிறார். ஆனால் ஜிஎஸ்டியை போடச் சொன்னது யாரு? ஜிஎஸ்டி போடாமல் இருந்தாலே எவ்வளவோ பணத்தை சேமித்திருக்கலாம்.. அதுமாதிரி தான் விஜய் பேசுவது… 2026 தேர்தலில் திமுகவுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.. முக்கியமாக அண்ணாமலை செல்லும் இடங்களுக்கு செல்வேன்” என்று தெரிவித்தார்..

Read More : RSS திட்டத்திற்கு துணைப் போகும் தவெக, நாம் தமிழர்.. அவர்கள் பேசும் அரசியல் ஆபத்தானது.. திருமாவளவன் எச்சரிக்கை..!

English Summary

SV Sekar criticized Vijay, saying, “Let him pay the tax on his car first, then he can talk about robbing the family.”

RUPA

Next Post

” கார் மாற்றுவதும் கால் மாற்றுவதும் எடப்பாடி பழனிசாக்கு ஒன்றும் புதிதல்ல..” உதயநிதி ஸ்டாலின் சாடல்!

Fri Sep 26 , 2025
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு இனி பாஜக உடன் கூட்டணி கிடையாது. அவர்கள் தான் தேர்தல் தோல்விக்கே காரணம் என்று அதிமுக.. ஆனால் இன்று எங்கள் ஆட்சியை காப்பாற்றியதே பாஜக. அதற்கு நன்றியோட இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.. இன்று […]
edapadi k palanisamy udhayanidhi stalin

You May Like