பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் துளசி தீர்த்தம், பலருக்கும் ஒரு ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்த்தத்தில் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கும்போது, அது வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமின்றி, மனித உடலுக்கான ஒரு இயற்கை மருந்தாகவும் பார்க்கப்படுகிறது.
துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்ற இயற்கை மூலிகைகள் தீர்த்தத்தில் சேர்க்கப்படுவதால், அது நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. துளசி, அதன் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்குத் தரும் தூய்மையான ஆற்றலுக்காக புகழ்பெற்றது. இதையே பெருமாளின் அருளின் அடையாளமாக கோவில்களில் தீர்த்தமாக வழங்குவது, ஆன்மீக நம்பிக்கையுடன் உடல்நலனையும் இணைக்கும் ஒரு அரிய நடைமுறையாக பார்க்கலாம்.
வீட்டுப் பூஜை அறையில் தீர்த்தம் வைக்க வேண்டுமென்பது நம் வழிபாட்டு மரபில் இருந்து வருகிறது. குறிப்பாக செம்பு பஞ்சபாத்திரத்தில் வைத்திருக்கும் தீர்த்தம், ஆழ்ந்த ஆன்மீக அலைவரிசையை உருவாக்கும். பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில், நீர் எனும் மூலக்கூறை பிரதிநிதித்துவப்படுத்தும் தீர்த்தம், வீட்டிற்கே ஒரு தெய்வீக பரிமாணத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.
தீர்த்தத்தின் மூலம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் :
* தூய்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி
* நரம்பியல் அமைப்புக்கு சீராக்கம்
* மனநிலை அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல்
* தினசரி உடல் புத்துணர்ச்சி
அந்த தீர்த்தத்தை தினமும் அருந்தும் போது, அதைத் தெய்வீக சக்தியுடன் அணுகுவது, நம் மனதிலும் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தீர்த்தம் அருந்தும் முறை :
பூஜையின் முடிவில், கற்பூர ஆரத்திக்குப் பிறகு தீர்த்தத்தை உள்ளங்கையில் மூன்று முறை ஊற்றி அருந்தும் பழக்கம், பெருமாள் கோவிலில் நடக்கும். அதே நேரத்தில் கீழ்காணும் விஷ்ணு மந்திரத்தை மனமார சொல்ல வேண்டியது நன்மையை கொடுக்கும்.
“அட்சுதாய நமஹ,
ஆனந்தாய நமஹ,
கோவிந்தாய நமஹ”
இந்த மந்திரம் மூலமாக மனதிற்குள் ஒரு தெய்வீக நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த நம்பிக்கை தான் நம்மை, எதையும் தாண்டி காத்து நிற்கும் என்று பெருமாள் வழிபாட்டு மரபு சொல்லும்.
ஒரே தீர்த்தத்தில் பக்தியும் இருக்கிறது, மருத்துவ நன்மையும் இருக்கிறது. பெருமாள் கோவில் தீர்த்தத்தின் வழியே வரும் நன்மைகளை, நம் வீட்டு பூஜையிலும் உணர வேண்டுமென்றால், அதற்கான முறை, மரியாதை மற்றும் மனநிலையும் அவசியம். ஒவ்வொரு நாளும் தீர்த்தத்தை அருந்தும் பழக்கம், நம் ஆன்மீக வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் ஒரு நல்ல ஆரம்பமாக அமையும்.