தென்காசி விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

tamilnadu cm mk stalin

தென்காசியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம். இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.11.2025) காலை சுமார் 11.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : மிகுந்த மன வேதனை அளிக்கிறது.. தென்காசி பேருந்து விபத்து.. விஜய் இரங்கல்..!

RUPA

Next Post

“ஒரு சகாப்தத்தின் முடிவு..” தர்மேந்திரா மறைவுக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி இரங்கல்..

Mon Nov 24 , 2025
நீண்டகால உடல்நலக் குறைவால் மும்பையில் இன்று காலமான பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது நடிப்பு வாழ்க்கையில் அவரது பாரம்பரியத்தையும் மறக்கமுடியாத நடிப்பையும் பாராட்டிய ஜனாதிபதி முர்மு, தர்மேந்திராவின் பணி இளம் தலைமுறை கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.. திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில் “ மூத்த நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ தர்மேந்திர ஜியின் மறைவு இந்திய […]
modi dharmendra

You May Like