சிவகாசி அருகே கோலுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் கோலுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் உள்ளே பல தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மளமளவென எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்க தடை..!! இன்று முதல் அமல்..