திருவள்ளூர் மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இரும்பு உற்பத்தி ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், தீ அருகிலுள்ள பிற கட்டமைப்புகளுக்கும் பரவி வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அச்சம் நிலவுகிறது.
செய்தி நிறுவனமான PTI பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டுகிறது. தொழிற்சாலையில் உள்ள பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதேபோல், முன்னதாக கடந்த வியாழக்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பருத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.