தொழில்நகரான திருப்பூரில், தொழிலாளர்களின் அணிவகுப்பால் இரவும் கூட பகலாக மாறிவிடுகிறது. ஏராளமான பின்னலாடை மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகளில் உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக திரண்டு வருகின்றனர். இந்நிலையில், நகரத்தின் முக்கிய மையமான திருப்பூர் பேருந்து நிலையத்தில், இரவு நேரங்களில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
பேருந்து நிலையம் அருகே இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் இளைஞர்களிடம், இளம் பெண்களின் செய்யும் செயல் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. “ஏ, ஒரு நிமிஷம்!” என அழைக்கும் ஒரு இளம்பெண், வாலிபருக்கு அருகில் சென்று நேரடியாக கட்டிப்பிடித்து முகம் முழுவதும் முத்தமழை பொழிகிறாள்.
அந்த இளைஞர்கள், அச்சத்தில் தப்பிச் செல்ல முயல்கிறார்கள். ஆனால், பெண்கள் திரும்பவும் விரட்டிச் சென்று, இனிமையான வார்த்தைகளால் மயக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு முறையல்ல. தொடர்ச்சியாகவே அரங்கேறி வருகிறது. சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது காதலின் வெளிப்பாடா அல்லது மோசடியின் முகமூடியாக இருக்குமா என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது. பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலைகளில் சேலை, சுடிதார், ஜீன்ஸ் என பல்வேறு அணிவகைகளில் இளம் பெண்கள் சுற்றித் திரிந்து வருகின்றனர்.
பெரும்பாலும், இவர்கள் வேலைக்காக புதிதாக நகரத்திற்கு வரும் இளைஞர்களை குறி வைத்து, முதலில் பேச்சு கட்டிச் சென்று, பின்னர் விபச்சாரத்திற்கு அழைக்கும் முயற்சி செய்கிறார்கள் என தெரிகிறது. முக்கியமாக, இவர்கள் எதிர்பார்க்காத வாலிபர்களிடம் திடீரென காதலை மையமாக வைத்து செயல்படுகிறார்கள். சிலர் அச்சத்தில் தப்ப முயல்கிறார்கள்.
ஆனால், சிலர் இந்த இவர்களின் வலையில் சிக்கிவிடுகிறார்கள். பின்னர், அவர்களை விடுதிகளில் அழைத்துச் சென்று பணத்தை முழுமையாக பறித்து அனுப்பி விடுகின்றனர். சிலர் போலீசில் புகார் கொடுக்கவும் தயங்கி நிற்கிறார்கள். இந்த சூழல், திருப்பூரின் முக்கியமான ஒரு பகுதியான பேருந்து நிலையத்திலேயே நடப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.